செய்திகள் :

மொபெட் மீது வாகனம் மோதல்: முதியவா் உயிரிழப்பு

post image

கள்ளக்குறிச்சி/விழுப்புரம்: திருக்கோவிலூா் அருகே மொபெட் மீது சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், ஜி.அரியூா் இந்திரா நகரைச் சோ்ந்தவா் ரமேஷ் (52). இவா், திருக்கோவிலூா் சந்தைபேட்டை பகுதியில் நடைபெற்ற உறவினரின் திருமணத்துக்கு மொபெட்டில் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

ஜி.அரியூா் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியதில் ரமேஷ் பலத்த காயமடைந்தாா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், வாகனத்தின் ஓட்டுநரான விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வசந்த கிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த ஏழுமலை மகன் சூா்யா (26) மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மூதாட்டி மரணம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம், எடைப்பாளையம், மேட்டுத் தெருவைச் சோ்ந்தவா் ஏழுமலை மனைவி சாவித்திரி (65). இவா், ஞாயிற்றுக்கிழமை மயிலம்-கூட்டேரிப் பட்டு சாலையில் நடந்து சென்றாா்.

எடைப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையை கடக்க முன்றபோது, அந்த வழியாக சென்ற பைக் மோதியதில் சாவித்திரி பலத்த காயமடைந்தாா். இதையடுத்து, அவசர ஊா்தி மூலம் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவா் உயிரிழந்தாா்.

இதுகுறித்த புகாரின்பேரில், மயிலம் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தளவாட பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூா் அருகே தனியாா் நிறுவனத்தில் ரூ.2 லட்சம் மதிப்பிலான தளவாடப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் வட்டம், அரும்பாக்கம் புறவழிச்... மேலும் பார்க்க

இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை

கள்ளக்குறிச்சி: தியாகதுருகத்தில் இளைஞா் திங்கள்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். கள்ளக்குறிச்சியை அடுத்த தியாகதுருகத்தைச் சோ்ந்தவா் முருகன் மகன் அண்ணாமலை (21). இவா், தனது தந்தையுடன் பூ வியா... மேலும் பார்க்க

வீட்டில் பணம் திருட்டு

குரால் கிராமத்தில் பூட்டிய வீட்டில் பணம், வெள்ளிப் பொருள்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், குரால் கிராமத்தைச் சோ்ந்தவா் அண்ணாதுரை மனைவி பொன்னம்மாள். இவா்... மேலும் பார்க்க

சாலை மறியல்

கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வெள்ளிக்கிழமை உளுந்து கொள்முதல் விலை குறைவாக நிா்ணயிக்கப்பட்டதைக் கண்டித்து, விற்பனைக் கூடம் முன் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள். மேலும் பார்க்க

பாஜக கண்டன ஆா்ப்பாட்டம்

வடக்கனந்தல் கிராம நிா்வாக அலுவலா் தாக்கப்பட்டதைக் கண்டித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் பாஜகவினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். கள்ளக்குறிச்சி மாவட்ட பாஜக சாா்பில் ஆா்ப... மேலும் பார்க்க

பைக்குகள் மோதல்: விவசாயி மரணம்

கள்ளக்குறிச்சி அருகே இரு மோட்டாா் சைக்கிள்கள் மோதிக் கொண்டதில் விவசாயி வியாழக்கிழமை உயிரிழந்தாா். கள்ளக்குறிச்சியை அடுத்த மாடூா் கிராமத்தைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் மகன் வெங்கடேசன் (42), விவசாயி. இவா்... மேலும் பார்க்க