செய்திகள் :

மொபைலில் IPL பார்த்துக்கொண்டே நெடுஞ்சாலையில் பேருந்தை ஓட்டிய அரசு டிரைவர் - மகாராஷ்டிரா அதிர்ச்சி

post image

மகாராஷ்டிராவில் சமீப காலமாக அடிக்கடி அரசு பஸ்கள் விபத்துக்குள்ளாகிறது. அதுவும் இரவு நேரத்தில் இது போன்ற விபத்துகள் அதிக அளவில் நடக்கிறது. டிரைவர்கள் பஸ் ஓட்டிக்கொண்டே மொபைல் போனில் வீடியோ பார்ப்பது, போனில் பேசுவது போன்ற காரியங்களில் ஈடுபடுவது இந்த விபத்துகளுக்கு காரணமாக அமைகிறது.

நடப்பு ஆண்டில் மட்டும் 400 பஸ் விபத்துகள் நடந்திருக்கிறது. நேற்று இரவு மும்பை தாதரில் இருந்து அரசு பஸ் ஒன்று புனே நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. பஸ் லோனவாலா அருகில் சென்றபோது டிரைவர் ஐ.பி.எல் கிரிக்கெட்டை பார்த்துக்கொண்டே பஸ்சை ஓட்டிக்கொண்டிருந்தார். மொபைல் போனை பஸ் ஸ்டியரிங் மீது வைத்துக்கொண்டு ஓட்டினார். அதனை பார்த்த சில பயணிகள் டிரைவருடன் இது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அதுவும் லோனவாலா பகுதி மலைகள் நிறைந்த ஒரு இடமாகும். மலைப்பகுதியில் டிரைவர் மொபைலில் கிரிக்கெட் பார்த்துக்கொண்டே ஓட்டியது அனைத்து பயணிகள் மத்தியில் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. டிரைவரின் செயலை சிலர் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பகிர்ந்தனர். அதோடு இது குறித்து போக்குவரத்து துறை அமைச்சர் பிரதாப் சர்நாயக்கிற்கும் வீடியோவை அனுப்பி புகார் செய்தனர்.

இதையடுத்து சம்பந்தப்பட்ட டிரைவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அதோடு அவர் உடனே பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சம்பந்தப்பட்ட பஸ்சை அரசு தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்து டிரைவருடன் குத்தகைக்கு வாங்கி இருந்தது. அக்கம்பெனிக்கு மாநில அரசு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து இருக்கிறது.

மொபைல் பார்த்துக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்களை கண்டுபிடித்து பயணிகள் சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகளிடம் புகார் செய்யவேண்டும் என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கேட்டுக்கொண்டுள்ளார். அதோடு மொபைல் போன் பார்த்துக்கொண்டே பஸ் ஓட்டும் டிரைவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், உடனடியாக பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவர் என்றும் பட்னாவிஸ் எச்சரித்துள்ளார்

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

Vikatan Weekly Quiz: எம்.பி-க்கள் சம்பளம் உயர்வு டு ATM கட்டணம் உயர்வு - இந்த வார க்விஸ்க்கு ரெடியா?

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பள உயர்வு, ஏடிஎம் கட்டணம் உயர்வு, இளையராஜாவுக்கு பாராட்டு விழா அறிவிப்பு, சர்வதேச கால்பந்து போட்டியில் கின்னஸ் சாதனை என இந்த வாரத்தின் சம்பவங்கள் பல பல... அவற்றின் கேள்வி... மேலும் பார்க்க

`எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' - குணால் கம்ராவை கைது செய்ய சிவசேனா அமைச்சர் கோரிக்கை

மகாராஷ்டிரா துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே சிவசேனாவில் இருந்து வெளியில் வந்ததை சித்திரிக்கும் விதமாக, அவரை துரோகி என்று விமர்சித்து காமெடி நடிகர் குணால் கம்ரா காமெடி ஷோவில் பாடினார். மும்பையில் இக்காமெட... மேலும் பார்க்க

Myanmar Earthquake: மியான்மாரில் அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படக் காரணம் என்ன?

மியான்மாரில் 7.7 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு நாட்டையே உலுக்கியுள்ளது.இந்த நிலநடுக்கம் சீனா, தாய்லாந்து ஆகிய நாடுகளிலும் உணரப்பட்டதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள... மேலும் பார்க்க

தெலுங்கானா: ஒரே நேரத்தில் இரண்டு பெண்களைத் திருமணம் செய்த வாலிபர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?

இந்து திருமணச் சட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருவரை மட்டுமே திருமணம் செய்ய முடியும். இரண்டாவது திருமணம் செய்வதாக இருந்தால் முதலில் திருமணம் செய்த நபரை விவாகரத்து செய்யவேண்டும். ஆனால் சில நேரங்களில் சட்டவிர... மேலும் பார்க்க

64 ஆண்டுகளுக்குப் பிறகுப் பேரப்பிள்ளைகள் நடத்தி வைத்த திருமணம்; நெகிழ வைக்கும் குஜராத் ஜோடி!

64 ஆண்டுகளுக்கு முன்பே குஜராத்தைச் சேர்ந்த ஒரு ஜோடி காதலித்து வீட்டை விட்டு ஓடி திருமணம் செய்து இருக்கிறது.64 ஆண்டுகளுக்கு முன்பு காதல் என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒன்றாக இருந்தது. ஆனால் அப்படிப... மேலும் பார்க்க

Life On Boat: வீடு, உடைமைகளை விற்று, பாய்மரப்படகில் குடியேறிய இந்திய குடும்பம்- கனவு நனவானது எப்படி?

கப்பலில் தங்களது முழு நேர வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறது ஓர் இந்திய குடும்பம். முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியான கேப்டன் கௌரவ் கௌதம் மற்றும் முன்னாள் ஊடக நிபுணரான அவரது மனைவி வைதேகி மற்றும் இவர்களின்... மேலும் பார்க்க