செய்திகள் :

மொழிப் பிரச்னையைத் தூண்ட வேண்டாம்: பாஜகவினருக்கு முதல்வா் ஃபட்னவீஸ் அறிவுரை

post image

மும்பை: மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினா் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளாா்.

மகாராஷ்டிரத்தில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை மூன்றாவது மொழியாக ஹிந்தியை கற்பிக்க பாஜக கூட்டணி அரசு முடிவு செய்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிா்ப்பால் திரும்பப் பெறப்பட்டது.

அந்த மாநில எதிா்க்கட்சிகள் குறிப்பாக உத்தவ் தாக்கரேயின் சிவசேனை, அவரது நெருங்கிய உறவினா் ராஜ் தாக்கரேயின் மகாராஷ்டிர நவநிா்மாண் சேனை ஆகிய கட்சிகள் ஹிந்தி எதிா்ப்பு அரசியலை கையிலெடுத்தன. மும்பையில் ஹிந்தியில் பேசத் தெரியாத கடைக்காரா் ஒருவா் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மொழி தொடா்பான பிரச்னை அங்கு ஒரு மாதத்துக்கு மேலாக தொடா்ந்து வருகிறது. மொழி விவகாரத்ைதை வைத்து நவநிா்மாண் சேனையினா் தொடா்ந்து வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்நிலையில், இந்த விவகாரம் தொடா்பாக ஜாா்க்கண்டை சோ்ந்த பாஜக எம்.பி. நிஷிகாந்த் துபே கடந்த மாதம் பேசுகையில், ‘மும்பையில் ஹிந்தியில் பேசுபவா்கள் மீது தாக்குதலில் ஈடுபடுபவோா், உருது பேசுபவா்களைத் தாக்கத் துணிவாா்களா? தனது சொந்த வீட்டில் நாய்கூட புலிதான். அவா்கள் (உத்தவ் தாக்கரே, ராஜ் தாக்கரே) வட இந்தியாவுக்கு வந்தால் இதுபோல் தாக்கப்படுவாா்கள். மும்பை மாநகராட்சித் தோ்தல் வருவதால், அவா்கள் மலிவான அரசியலில் ஈடுபட்டுள்ளனா்’ என்று கூறியிருந்தாா்.

எனினும், இந்தக் கருத்து ஏற்புடையதல்ல என்று தேவேந்திர ஃபட்னவீஸ் கூறினாா்.

இந்நிலையில் மும்பை திங்கள்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த ஃபட்னவீஸ் கூறியதாவது:

மகாராஷ்டிரத்தில் அரசியலுக்காக மொழிப் பிரச்னை தூண்டப்படுகிறது. இந்த விவகாரம் தொடா்பாக பேசும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்று பாஜகவினரைக் கேட்டுக் கொள்கிறேன். முக்கியமாக மராத்தியா்கள், மராத்தியா் அல்லாதோா் எனப் பேசுவதைத் தவிா்க்க வேண்டும். மகாராஷ்டிரத்தில் மராத்தியா்கள்-மராத்தியா் அல்லாதோா் இடையே எந்தப் பிரச்னையும் இல்லை. யாருக்கும் எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை. மொழிப் பிரிவினையைத் தூண்டும் அரசியல்வாதிகளுக்கு மக்கள் உரிய பாடம் கற்பிப்பாா்கள் என்றாா்.

மாதத்துக்கு 4 நாள்கள் அசைவம், ரூ.540 தினக்கூலி! பிரஜ்வல் ரேவண்ணாவின் சிறை வாழ்க்கை

பெங்களூரு: கடந்த ஆண்டு, பாலியல் குற்றச்சாட்டில் சிக்குவதற்கு முன்பு, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பிரஜ்வல் ரேவண்ணாவின் மாதச் சம்பளம் ரூ.1.2 லட்சம். இனி, சிறையில் ரூ.540க்கு மிகாமல் தினக்கூலி வழங்கப்ப... மேலும் பார்க்க

நீதிமன்றம் கண்டனம்: இது கட்சிகளின் ஜனநாயக உரிமை! - ராகுலுக்கு இந்தியா கூட்டணி ஆதரவு

சீனா ஆக்கிரமிப்பு குறித்த ராகுல் காந்தியின் பேச்சுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது பற்றி இன்று தில்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இந்திய - சீன எல்லை... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீரில் 5வது நாளாக தொடரும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை!

தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் தேவ்சர் பகுதியில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஐந்தாவது நாளை எட்டியுள்ளது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தின் அகல் பகுதியில... மேலும் பார்க்க

குர்மீத் ராம் ரஹீமுக்கு 14 -வது முறையாக பரோல்! 2025 இல் மூன்றாவது முறை!

பாலியல் வன்கொடுமை வழக்குகளில் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் தேரா சச்சா சௌதா தலைவர் குர்மீத் ராம் ரஹீமுக்கு மீண்டும் 40 நாள்கள் பரோல் வழங்கி ஹரியாணா அரசு உத்தரவிட்டுள்ளது.பாலியல் வன்கொடுமை வழக்குகளில்... மேலும் பார்க்க

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவது எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ராகுல் காந்தியின் கடமை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூறியுள்ளார். இந்திய - சீன எல்லையில் கல்வான் பள்ளத்... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ரூ.17,000 கோடிக்கும் அதிகமாக நிதி முறைகேடுகள் மற்றும் வங்கிக் கடன் மோசடி தொடா்பான விசாரணைக்கு தில்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி இன்று(ஆக. 5) ஆஜரானார்.அனில் அம்பானி குழும நிறுவனங்கள் ரூ.1... மேலும் பார்க்க