புல்வாமா தாக்குதலில் மோடி அரசைக் குற்றம்சாட்டிய J&K Ex ஆளுநர் மறைவு; யார் இந்த ச...
பராசக்தியில் வில்லனாக நடிக்க வேண்டியது...ஆனால்: லோகேஷ் கனகராஜ் விளக்கம்!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் பராசக்தி திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி திரைப்படம் வருகிற ஆக. 14 ஆம் தேதி திரையரங்களில் வெளியாகவுள்ளது.
பான் இந்திய பிரபலங்கள் நடித்திருப்பதால் ரஜினிகாந்த்தின் அதிக வசூல் திரைப்படமாக இப்படம் அமையலாம் என எதிர்பார்ப்புகள் நிலவுகின்றன.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லோகேஷ் கனகராஜ், “நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடிக்க முதலில் என்னைத்தான் அணுகிறார்கள். கதையும் எனக்குப் பிடிதிருந்தது. எஸ்கேவும் நீங்கள் நடித்தால் நன்றாக இருக்கும் என்றார். ஆனால், கூலி படத்தின் பணிகள் பாதிக்கப்படக்கூடாது என அப்படத்தில் இணையவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.
விரைவில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் நாயகனாக நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: ஓடிடியில் பறந்து போ!