மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சி மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு! நாடாளுமன்ற...
வயநாட்டுக்குக் கூடுதல் கிராமப்புற சாலைகள் ஒதுக்க வேண்டும்: பிரியங்கா வலியுறுத்தல்
மாலைப்பாங்கான மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி கேரள அரசை வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரியங்கா வெளியிட்ட அறிக்கையில்,
பழங்குடி மக்கள் அடர்த்தியாக உள்ள மாவட்டங்களில் பழங்குடி கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களைக் கருத்தில் கொண்டு, மலைப்பாங்கான மாவட்டத்தில் கிராமப்புற சாலைகள் அமைக்கும்போது கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளது.
கேரள மாநில கிராமப்புற சாலைகள் மேம்பாட்டு நிறுவனத்திடம் கூடுதல் கிலோமீட்டர் ஒதுக்குமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார். வயநாடு ஒரு லட்சிய மாவட்டமாகவும், கணிசமான பழங்குடி மக்கள் தொகையைக் கொண்டதாகவும், எனவே சிறப்புப் பரிசீலனைக்குத் தகுதியானது என்றும் அவர் குறிப்பிட்டார்.
வயநாடு நாடாளுமன்றத் தொகுதியின் தனித்துவமான சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் அனைத்து வளர்ச்சிக்கும் இணைப்பு மிக முக்கியமானது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கேரளத்தில் கட்டப்படவுள்ள 500 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகளில், விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்காக வயநாடு மாவட்டத்திற்கு 20 கிலோமீட்டர் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அது போதுமானதாக இல்லை என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வயநாடு மாவட்டத்தில் தேசிய கிராமப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டு முகமை ஒப்புதல் அளித்த 300 சாலைகளுக்கான திட்ட அறிக்கைகளைத் தயாரிக்கும் செயல்முறையை விரைவுபடுத்துமாறு அவர் மாநில அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.