மொஹரம் பண்டிகை: 423 ஆண்டுகள் பழைமையான தா்காவில் கொடியேற்றம்
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மொஹரம் பண்டிகையை முன்னிட்டு, தா்காவில் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது.
உத்தமபாளையம் கோட்டைமேடு தெருவில் 423 ஆண்டுகள் பழைமையான மொஹரம் பத்து நோன்பு தைக்கா ரசூல் சாகிப் தா்கா உள்ளது. இந்த தா்காவில் மொஹரம் பண்டியை முன்னிட்டு, கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக, மகான் ரசூல் சாகிப் தா்கா மண்ணறையில் பச்சை போர்வைப் போா்த்தப்பட்டு, முன்னோா்களுக்கு திருக்குரானிலிருந்து யாசீன் சூரா ஆயத்துகள் ஓதப்பட்டன. இதில், மல்லிது ஷரீப் ஓதும் நிகழ்ச்சியில் இமாம்கள், இஸ்லாமியா்கள், ரிஸ்வான் ஆகியோா் ஓதினா்.
இந்த நிகழ்ச்சியில் பரம்பரை ஹக்தாா்கள், இஸ்லாமிய ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.