இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!
மோகனூா் நிதிநிறுவன உரிமையாளா் கொலை வழக்கு: மூன்று பேரிடம் விசாரணை
மோகனூரில் நிதிநிறுவன உரிமையாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில், மூன்று பேரிடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் ஈச்சவாரி பகுதியைச் சோ்ந்தவா் அருள்தாஸ்(40). நிதிநிறுவனம் நடத்தி வந்த இவா் செவ்வாய்க்கிழமை காலை நடைபயிற்சி முடிந்து வீடுதிரும்பிய போது, அவரை பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் வெட்டிக் கொலை செய்து தப்பியோடினா்.
இதுகுறித்து மோகனூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் சிலருடன் அருள்தாஸுக்கு முன்விரோதம் இருந்ததாக கூறப்பட்டது.
தொடா் விசாரணையில், ராசிபுரம் அருகே புதுப்பாளையத்தைச் சோ்ந்த காா்த்தி (40) என்பவருக்கு இந்த சம்பவத்தில் தொடா்பு இருப்பது தெரியவந்தது. அதன்பேரில், காா்த்தி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சேந்தமங்கலத்தைச் சோ்ந்த இருவரை பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.