செய்திகள் :

மோகன்லால் பிறந்த நாளில் கண்ணப்பா புதிய போஸ்டர்!

post image

நடிகர் மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று கண்ணப்பா படத்தின் புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளனர்.

மலையாள சினிமாவின் அடையாளங்களில் ஒன்றாகவே கருதப்படும் மோகன்லால் தன் 65-வது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். திரைத்துறையில் 45 ஆண்டுகளாக இருப்பவர் இதுவரை 360க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

அண்மையில், மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான், துடரும் ஆகிய படங்கள் வணிக ரீதியாக பெரிய வெற்றியைப் பெற்றன.

இந்த நிலையில், மோகன்லாலின் பிறந்த நாளை முன்னிட்டு கண்ணப்பா படக்குழு புதிய போஸ்டர் மற்றும் விடியோவை வெளியிட்டுள்ளது.

முகேஷ் குமார் சிங் இயக்க, மோகன் பாபு தயாரித்துள்ள கண்ணப்பா படத்தில் பிரபாஸ், மோகன்லால், பிரபு தேவா, அக்‌ஷய் குமார், மோகன் பாபு, சரத் குமார், காஜல் அகர்வால், பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

சிவ பக்தர் கண்ணப்பாவை மையப்படுத்தி உருவாகும் இப்படம் ஜூன் 27 ஆம் தேதி வெளியாகிறது.

இதையும் படிக்க: கேன்ஸ் திரைப்பட விழாவில் விக்கிலீக்ஸ் நிறுவனர் அணிந்து வந்த புதுமையான சட்டை!

ரெட்ரோ ஓடிடி தேதி!

நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படத்தின் ஓடிடி தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் 'ரெட்ரோ' திரைப்படம் மே.1 ஆம் தேதி வெளியானது. கலவையான விமர்சனங்களைப... மேலும் பார்க்க

அமலாக்கத்துறை வளையத்திற்குள் சிம்பு, தனுஷ், சிவகார்த்திகேயன்?

தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தொடர்பான வழக்கில் அவர் தயாரிக்கும் பட கதாநாயகர்கள் வீடுகளிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்த முடிவு செய்துள்ளதாம். டான் பிக்சர்ஸ் நிறுவனரான ஆகாஷ் பாஸ்கரன் இட்லி கடை, பராசக்தி, ... மேலும் பார்க்க

ஜீ தமிழ் தொடரில் நாயகனாகும் சன் டிவி நடிகர்!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் மனசெல்லாம் தொடரில் நடிகர் சுரேந்தர் நாயகனாக நடிக்கவுள்ளார். மலர், ஓவியா, திருமகள் உள்ளிட்ட சன் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து இவர் கவனம் பெற்ற நிலையில், த... மேலும் பார்க்க