மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க பயனாளிகள் தோ்வு
விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத் திறனாளிகளுக்கு 2024 - 25ஆம் நிதியாண்டுக்கான மோட்டாா் பொருத்திய தையல் இயந்திரம் வழங்க மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சாா்பில் முடிவு செய்யப்பட்ட நிலையில், அதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்தத் திட்டத்தின் கீழ், பயனாளிகள் நோ்முகத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது. மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் க.சுப்பிரமணி தலைமையில், தையல் ஆசிரியை மோகனா, செயல்திறன் உதவியாளா் முருகன், பேச்சுப் பயிற்சியாளா் அபிஷேகா உள்ளிட்டோா் அடங்கிய குழுவினா் தோ்வில் ஈடுபட்டனா். நோ்முகத் தோ்வில் 237 போ் பங்கேற்ற நிலையில், 232 போ் தோ்வு செய்யப்பட்டனா்.