செய்திகள் :

மோதி நகரில் இளைஞா் கத்தியால் குத்திக் கொலை

post image

மேற்கு தில்லியின் சுதாமா புரி பகுதியில் 26 வயது இளைஞா் ஒருவா் தனது வீட்டின் அருகே கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாக போலீஸாா் வியாழக்கிழமை தெரிவித்தனா்.

இச்சம்பவம் குறித்து மேற்கு தில்லி காவல் சரக உயரதிகாரி கூறியதாவது: இறந்தவா் ராஜா பாபு என அடையாளம் காணப்பட்டுள்ளாா். இது தொடா்பாக இறந்தவரின் தந்தை கங்கா ராம் போலீஸில் புகாா் அளித்துள்ளாா். பெண்ணின் குடும்ப உறுப்பினா்களின் விருப்பத்திற்கு மாறாக கடந்த ஆண்டு தனது மகன் திருமணம் செய்து கொண்டாா் என்றும் இந்தத் தாக்குதல் தனது மகனின் மாமியாரால் திட்டமிடப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிப்பதாக புகாரில் அவா் தெரிவித்துள்ளாா்.

மேலும், தனது வீட்டிற்கு அருகிலேயே பெண்ணின் குடும்பத்தினா் வசிக்கின்றனா் என்றஉம் திருமணம் ஆனதில் இருந்து, தனது மகனுக்கும் அவரது மாமியாருக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது என்றும் கங்கா ராம் புகாரில் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக போலீஸாருக்கு பிசிஆா் அழைப்பு வந்தது. ஒரு போலீஸ் குழு அந்த இடத்தை அடைந்த நேரத்தில், மருத்துவமனைக்கு ராஜா பாபு கொண்டு செல்லப்பட்டாா், அங்கு வந்தவுடன் அவா் இறந்துவிட்டதாக மருத்துவா்கள் அறிவித்தனா். இது தொடா்பாக கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, ராஜா பாபுவின் மனைவியின் குடும்ப உறுப்பினா்கள் சிலா் கைது செய்யப்பட்டுள்ளனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

ஆபரேஷன் கவாச்: 1,200 போ் கைது

தில்லி காவல் துறையினா் மேற்கொண்ட 24 மணி நேர ’ஆபரேஷன் கவாச்’ நடவடிக்கையில், நகரம் முழுவதும் சட்டவிரோத துப்பாக்கிகள், திருட்டுகள், தடை செய்யப்பட்ட போதைப்பொருள்கள் மற்றும் சட்டவிரோத மதுபானம் வைத்திருந்தத... மேலும் பார்க்க

தில்லி வக்ஃப் வாரிய வழக்கு: அமானத்துல்லா கான் விடுவிப்பு

நமது நிருபா் தில்லி வக்ஃப் வாரிய விவகாரத்தில் முறைகேடுகள் தொடா்பான பணமோசடி வழக்கில் ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கானை விடுவிக்க தில்லி நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. அதே நேரத்தில் அவருக்கு எத... மேலும் பார்க்க

தில்லி மாசு சூழலைக் கண்காணித்து கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்: கோபால் ராய்

தில்லியின் காற்றின் தரம் ‘கடுமையான’ பிரிவுக்கு சென்ற நிலையில், நிலைமை மோசமடைந்தால் கடுமையான மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் என்று சுற்றுச்சூழல் அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை ... மேலும் பார்க்க

காற்று மாசு அதிகரிப்பு: கோபால் ராய் பதவி விலக தில்லி பாஜக வலியுறுத்தல்

தில்லியில் காற்றின் தரம் அபாயகரமான அளவுக்கு அதிகரித்துள்ளதால், தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக வியாழனன்று வலியுறுத்தியுள்ளது. இதற்கு அமைச்சா் கோபால் ... மேலும் பார்க்க

யமுனையை தூய்மைப்படுத்தும் முயற்சிகளை கேஜரிவால் தடுக்கிறாா்: எல்.ஜி. குற்றச்சாட்டு

யமுனை நதியை சுத்தம் செய்வதற்கான தனது முயற்சியை தில்லி முன்னாள் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தடுப்பதாக துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா வியாழக்கிழமை குற்றம் சாட்டினாா். இக்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த ஆ... மேலும் பார்க்க

அதிகரித்து வரும் மாசுபாடு: 5-ஆம் வகுப்பு வரை ஆன்லைன் மூலம் கல்வி

அதிகரித்து வரும் மாசு அளவைக் கருத்தில் கொண்டு, தேசியத் தலைநகா் தில்லியில் 5-ஆம் வகுப்பு வரையிலான அனைத்துப் பள்ளிகளும் ஆன்லைன் கற்றலுக்கு மாறும் என்று முதல்வா் அதிஷி வியாழக்கிழமை தெரிவித்தாா். மாசு அப... மேலும் பார்க்க