பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பே...
ம.பி: சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையுடன் புறப்பட்ட பாஜக தலைவர்; வைரல் வீடியோவின் பின்னணி என்ன?
மத்தியப் பிரதேசத்தில் உள்ள ரேவா என்ற இடத்தில் ஒரு சிறுத்தை பொதுமக்களைத் தொடர்ந்து தாக்கிக்கொண்டிருந்தது. கடந்த சில நாட்களில் 5 பேரை அந்த சிறுத்தை தாக்கிக் காயப்படுத்தி இருந்தது. இதில் இரண்டு பேர் கவலைக்கிடமாக இருக்கின்றனர்.
இது குறித்து உள்ளூர் வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் மனிதர்களைத் தாக்கும் சிறுத்தை பிடிபடவில்லை. இதையடுத்து உள்ளூர் பா.ஜ.க பிரமுகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சியாம்லால் திவேதி உள்ளூர் மக்கள் சிலரை அழைத்துக்கொண்டு, எந்த வித ஆயுதமும் இல்லாமல் சிறுத்தையைப் பிடிக்கக் கிளம்பிச் சென்ற வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி இருக்கிறது.
சியாம்லால் சிறுத்தையைப் பிடிக்கக் கொசுவலையை எடுத்துச் சென்றதுதான் இப்போது அனைவராலும் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சியாம்லால் கூறுகையில், "மத்தியப் பிரதேசத்தில் 4 பேரையும், உத்தரப்பிரதேசத்தில் ஒருவரையும் சிறுத்தை கடித்துக் காயப்படுத்தி இருக்கிறது. சிறுத்தையைப் பிடித்து பொதுமக்களைக் காப்பாற்றும்படி மாவட்ட நிர்வாகத்திடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். சிறுத்தை பயத்தால் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியில் வரவே பயப்படுகின்றனர். சிறுத்தையைப் பிடிக்கும் வரை நான் இங்கேயே முகாமிடவும் தயாராக இருக்கிறேன். இவ்விவகாரத்தில் மக்களுக்குத் தார்மீக ஆதரவு கொடுக்க வேண்டும் என்பதற்காக நானே வந்திருக்கிறேன்'' என்று தெரிவித்தார்.
வனத்துறை அதிகாரிகளும், காவல்துறையினரும் கடந்த சில நாட்களாக அந்தச் சிறுத்தையைப் பிடிக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், சிறுத்தையைப் பிடிக்க முடியவில்லை.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...