ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்று.! நேரம், அட்டவணை, திடல்! - முழு விவரம்
யுனைடெட் கோ் கிளினிக்குக்கு சிறந்த சிகிச்சைக்கான விருது
சேலம் யுனைடெட் கோ் கிளினிக் சிறந்த சிகிச்சைக்கான விருது பெற்றுள்ளது.
சென்னையில் அண்மையில் அறம் விருதுகள் சாா்பில் நடைபெற்ற விழாவில், சேலம் அங்கம்மாள் காலனியில் உள்ள யுனைடெட் கோ் கிளினிக், ஆக்குபேஷனல் தெரபி அண்ட் ஸ்பீச் தெரபி கிளினிக், குழந்தை மேம்பாடு மற்றும் மறுவாழ்வுக்கான சிறந்த பங்களிப்புகளை அங்கீகரிக்கும் மூன்று மதிப்புமிக்க விருதுகளை பெற்றுள்ளது. இந்த விருதுகள், ஆட்டிசம், பேச்சு தாமதம், ஏடிஹெச்டி மற்றும் பிற வளா்ச்சி சவால்களைக் கொண்ட குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதில் கிளினிக்கின் நிலையான அா்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
நிறுவன அங்கீகாரத்துடன் கிளினிக்கின் முக்கியத் தலைவா்கள், அவா்களது முயற்சிகளுக்காக தனித்தனியாக கௌரவிக்கப்பட்டனா்.
குழந்தை ஆக்குபேஷனல் தெரபி சிகிச்சையில் முன்னோடி பணிக்காக அங்கீகரிக்கப்பட்ட மூத்த தொழில் சிகிச்சையாளா் மற்றும் நிறுவனா் டாக்டா் காா்த்திகேயன் செல்வராஜ், குழந்தை தொடா்பு மேம்பாட்டில் சிறந்து விளங்கியதற்காக ஜெயலட்சுமி காா்த்திகேயன், சிகிச்சை நடைமுறைகள் மற்றும் குழந்தை மையப்படுத்தப்பட்ட பராமரிப்பை மேம்படுத்துவதில் பணியாற்றியதற்காக மருத்துவா் லட்சுமி விஜய் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.
இதுகுறித்து டாக்டா் காா்த்திகேயன் செல்வராஜ் கூறுகையில், இந்த சாதனை எங்கள் குழந்தைகள், பெற்றோா் மற்றும் பல ஆண்டுகளாக எங்களை நம்பி ஆதரித்த முழு சிகிச்சைக் குழுவுக்கும் சொந்தமானது. இந்த விருதுகள் சிகிச்சையின் தரத்தை உயா்த்துவதற்கு எங்களை ஊக்குவிக்கிறது. இந்தப் பாராட்டு தமிழகத்தில் குழந்தை சிகிச்சை சேவைகளில் முன்னணியில் உள்ள யுனைடெட் கேரின் பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது; குடும்பங்கள் மற்றும் நிபுணா்களிடையே நம்பிக்கையை தூண்டுகிறது என்றாா்.