வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது: வணிக வளாகத்துக்கு உத்தரவு
யுபிஐ சேவை முடக்கம்! ஜி பே, போன் பே செயல்படுகிறதா?
நாடு முழுவதும் யுபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற சேவையைப் பயன்படுத்த முடியவில்லை எனப் பல்வேறு பயனர்களிடமிருந்து புகார்கள் எழுந்துள்ளன.
குறிப்பாக இன்று மாலை 7 மணி முதல் யுபிஐ செயல்படவில்லை என 23 ஆயிரம் புகார்கள் எழுந்துள்ளதாக பல்வேறு இணையதளப் பக்கங்கள் மற்றும் இணைய சேவைகளின் நிகழ் தரவுகளை வழங்கிவரும் டவுன்டிடக்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
யுபிஐ பணப்பரிமாற்றத்தை பல்வேறு செயலிகளின் வாயிலாக பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் யுபிஐ சேவை குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, யுபிஐ சேவையைப் பயன்படுத்த முடியவில்லை என கூகுள் பே-யிலிருந்து 296 புகார்கள் வந்துள்ளன.