யு சான்றிதழுடன் வெளியாகும் அர்ஜுன் தாஸ் திரைப்படம்!
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் உருவான பாம் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய தணிக்கைச் சான்றிதழ் இந்தப் படத்துக்கு யு சான்றிதழை அளித்துள்ளது.
நடிகர் அர்ஜுன் தாஸ் ரசவாதி திரைப்படத்திற்குப் பின் பாம் எனும் படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் உருவான இப்படத்தில் சிவாத்மிகா, காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜெம்ப்ரியோ பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் ஈர்த்திருந்தது.
டி. இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தின் ’இன்னும் எத்தனை காலம்’ எனும் பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்தப் படம் செப்.12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது.
Certified U – A clean FAMILY ENTERTAINER ✨ #BombMovie hits theatres on Sept 12th ♥️
— Arjun Das (@iam_arjundas) September 10, 2025
Produced by @gembriopictures
TN release by @SakthiFilmFctry
@ShivathmikaR@kaaliactor@SudhaSukumar4@kaizensukumar@vishalvenkat_18
A @immancomposer Musical ♥️ pic.twitter.com/Zj9LcF8cre