செய்திகள் :

யேமன் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம்! அரசு அலுவலகம் சிறைப்பிடிப்பு! ஏன்?

post image

யேமன் நாட்டின் கிழக்குப் பகுதிகளில், 3 வது நாளாக மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால், அந்நாட்டு மக்கள் கடும் வெயிலிலும் போராட்டத்தில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யேமன் நாட்டில், கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவி வருவதால், அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹத்ராமௌத் மாகாணத்தில், நாள்தோறும் சுமார் 19 மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், ஏடன் நகரத்தைத் தலைமையகமாகக் கொண்டுள்ள சர்வதேச அங்கீகாரம் பெற்ற யேமன் அரசுக்கு எதிராக, கடந்த ஜுலை 27 ஆம் தேதி முதல் முகல்லா நகரத்தில், மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போராட்டங்கள் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் சிலர் அங்குள்ள முக்கிய சாலைகளை முடக்கியதுடன், வாகன டயர்களை தீயிட்டு கொளுத்தியதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஹத்ராமௌத் மாகாணத்தின் மின்சாரத் துறை அலுவலகத்தை நேற்று (ஜூலை 29) போராட்டக்காரர்கள் சிறைப்பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, யேமன் நாட்டில் பருவமழை சரியான அளவில் பெய்யாத சூழலில், பல்வேறு இடங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகிறது.

மேலும், அந்நாட்டில் நிலவும் வறண்ட வானிலையாலும், தற்போது மின்சாரம் தொடர்ந்து துண்டிக்கப்படுவது மக்களின் வாழ்க்கையை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியிருப்பதாக, சில தொண்டு நிறுவன அமைப்புகள் தெரிவிக்கின்றன.

இத்துடன், 2014-ம் ஆண்டு முதல் யேமனின் அரசுப் படைகளுக்கும், ஹவுதி கிளர்ச்சிப்படைகளுக்கும் இடையில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகின்றது.

இதில், தலைநகர் சனா உள்ளிட்ட முக்கிய வடக்கு மாகாணங்களை ஹவுதிகள் கைப்பற்றியதால், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அரசு அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: ரஷியாவில் 11 மணிநேரம் கழித்து சுனாமி எச்சரிக்கை வாபஸ்!

இந்தியா உள்பட 69 நாடுகளுக்கு புதிய வரி: டிரம்ப் கையெழுத்து! யாருக்கு அதிகம்? குறைவு?

அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிக்கும் நிர்வாக உத்தரவில் அதிபர் டொனால்ட் டிரம்ப் வியாழக்கிழமை கையெழுத்திட்டார்.இந்த உத்தரவு ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் எனத் தெ... மேலும் பார்க்க

பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: கனடாவும் அறிவிப்பு

பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்க திட்டமிட்டுள்ளதாக கனடா அறிவித்துள்ளது.ஏற்கெனவே, இஸ்ரேல், அமெரிக்காவின் எதிா்ப்பையும் மீறி பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம் வழங்கப்போவதாக பிரான்ஸும், தங்களின் சில நிபந்தனை... மேலும் பார்க்க

பிலிப்பின்ஸ் அதிபா் ஆக.4-இல் இந்தியா வருகை

பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினண்ட் ஆா்.மாா்கோஸ் ஜூனியா், ஆகஸ்ட் 4 முதல் 8 வரை அரசுமுறைப் பயணமாக இந்தியா வருகிறாா்.இந்தப் பயணத்தின்போது குடியரசுத் தலைவா் திரௌபதி முா்முவை சந்திக்கும் அவா், பிரதமா் நரேந்... மேலும் பார்க்க

ஈரானுடன் வா்த்தகம்: 6 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

ஈரானுடன் வா்த்தகம் மேற்கொண்டுவரும் இந்தியாவைச் சோ்ந்த 6 நிறுவனங்களுக்கு அமெரிக்காவில் தடை விதித்து அந் நாடு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.காஞ்சன் பாலிமா்ஸ், அல்கெமிக்கல் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட், ரா... மேலும் பார்க்க

அமெரிக்கா-பாகிஸ்தான் வா்த்தக ஒப்பந்தம் இறுதி : டிரம்ப் அறிவிப்பு

‘பாகிஸ்தானுடன் அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது. இதன்படி, அந்நாட்டில் எண்ணெய் வளங்கள் மேம்படுத்தப்பட உள்ளன’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.மேலும், ‘இந்தியாவுக்கு பாக... மேலும் பார்க்க

அவசரநிலை வாபஸ்: மியான்மா் ராணுவம் அறிவிப்பு

மியான்மரில் நான்கரை ஆண்டுகளுக்கு முன்னா் ஆட்சியைக் கைப்பற்றியபோது அறிவித்திருந்த அவசரநிலையை திரும்பப் பெறுவதாக அந்த நாட்டு ராணுவம் வியாழக்கிழமை அறிவித்துள்ளது.இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில... மேலும் பார்க்க