நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையத்தில் மாநகராட்சி ஆணையா் ஆய்வு
ரகசியமாக இந்தியா வந்து சென்ற தலிபான் அமைச்சர்கள்?
ஆப்கானிஸ்தான் நாட்டை ஆட்சி செய்து வரும் தலிபான் அரசின் மூத்த அமைச்சர்கள், ரகசியமாக இந்தியா வந்து சென்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்க படைகள் வெளியேறின. இதையடுத்து, தலிபான்களின் தலைமையிலான இடைக்கால அரசு அந்நாட்டை தற்போது ஆட்சி செய்து வருகின்றது.
ஆப்கானிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு 4 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், சர்வதேச நாடுகளின் அங்கீகாரத்தை தலிபான் அரசு கோரி வருகின்றது.
இந்நிலையில், ஆப்கானிஸ்தானின் மருத்துவம் மற்றும் உணவுத் துறை துணை அமைச்சர் ஹம்துல்லா ஸாஹித், கடந்த வாரம் தலிபான் அதிகாரிகள் குழுவுடன் தலைநகர் தில்லிக்கு வருகை தந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பயணத்தில், இந்திய வர்த்தக சபை அதிகாரிகளுடனான ஆலோசனைகளை அவர் மேற்கொண்டதாகவும், கடந்த 2 நாள்களுக்கு முன்பு அவர் தாயகம் திரும்பியதாகவும் கூறப்படுகிறது.
இதேபோல், ஆப்கான் அரசின் பாதுகாப்பு மற்றும் செயல்திட்ட விவகாரங்களைக் கையாளும் அமைச்சர் ஒருவரும் தில்லி வந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும், அவர் யாரெனும் தகவல்கள் தற்போது வரை வெளியாகவில்லை.
தலிபான் அரசை இந்தியா இன்னும் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை. ஆனால், காபுலில் இந்தியத் தூதரகம் மீண்டும் திறக்கப்பட்டது மற்றும் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட ஆப்கன் மக்களுக்கு நிவாணப் பொருள்களை மத்திய அரசு அனுப்பியதன் மூலம் இருநாடுகளுக்கு இடையிலான உறவுகளில் முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
இத்துடன், மும்பை மற்றும் ஹைதராபாத் நகரங்களில் இருந்த ஆப்கானிஸ்தான் தூதரகங்கள், தலிபான் அரசு நியமித்த அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 86 பேர் பலி