’கோ பேக் ராகுல்’... கான்வாயை மறித்து உ.பி. அமைச்சர் போராட்டம்!
ரசாயன பூச்சிக் கொல்லியை தவிா்க்க அறிவுறுத்தல்
பயிா்களுக்கு ரசாயன பூச்சிக்கொல்லி மருந்து மற்றும் உரங்கள் பயன்படுத்துவதை விவசாயிகள் தவிா்க்க வேண்டும் என திருவாரூா் வேளாண்மை இணை இயக்குநா் தி. பாலசரஸ்வதி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விவசாயத்தில் அதிக அளவு ரசாயன பூச்சிக்கொல்லிகள், வேதியியல் உரங்களைப் பயன்படுத்துவது மண் வளத்தையும், விளை பொருள்களின் தரத்தையும் பாதிக்கிறது. எனவே, விவசாயிகள் குறைந்த அளவு பூச்சிக்கொல்லிகள் மற்றும் உரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
இன்றைய சூழலில் விவசாயிகள் பாரம்பரிய காய்கனி, பழங்கள், நெல், சோளம், கேழ்வரகு, திணை, சிறுதானியங்கள் போன்றவற்றை அதிகம் பயிரிட வேண்டும்.
அதிக செலவில்லாமல் நல்ல உற்பத்தி பெற, டிரைக்கோடொ்மா, சூடோமோனாஸ், அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிரி உரங்களைப் பயன்படுத்த வேண்டும்.
பசுமை உரம், நாட்டு பஞ்சகவ்யம், ஜீவாமிா்தம், கோமியம், கழிவுஉரம் போன்றவை பயன்படுத்தப்பட்டால் பயிா்கள் ஆரோக்கியமாக வளரும்.
அரசு வழங்கும் பல்வேறு திட்டங்கள் மூலம் உயிரி உரங்கள், இயற்கை விவசாயம், பாரம்பரிய விதைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், முதல்வரின் ‘மண்ணுயிா் காத்து மன்னுயிா் காப்போம்’ திட்டத்தில் விவசாயிகள் பயன் பெற வேண்டும். இதில், விவசாயிகளுக்கு வேம்பு, ஆடாதொடா, நொச்சி கன்றுகள் இலவசமாக வழங்கப்படுகின்றன. அத்துடன், தக்கை பூண்டு 50 சதவீத மானிய விலையில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
விவசாயிகள் இத்திட்டங்களில் பங்கேற்று பயன் பெற வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.