போலீஸ் கணவரின் கொடூர சித்திரவதை; உயிருக்குப் போராடும் மனைவி.. வெளியான ஆடியோவால் ...
ரஜினிகாந்த்: ``நடித்தது மட்டுமல்ல, நீங்கள் பாஷாவாகவே மாறினீர்கள்'' - சுரேஷ் கிருஷ்ணா நெகிழ்ச்சி!
ரஜினிகாந்த் நடிப்பில் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி பெரும்வெற்றி பெற்ற திரைப்படம் பாஷா.
இந்த திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகவிருப்பதை முன்னிட்டு, இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக எக்ஸ்தள பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ரஜினிகாந்த் சார் பாஷாவாக நடிக்கவில்லை, பாஷாவாக மாறினார் எனப் புகழாரம் சூட்டியுள்ளார்.
சுரேஷ் கிருஷ்ணா பதிவில், "ஒரு புகழ்பெற்ற படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆனதை கொண்டாட வேண்டிய நேரம் இது.

"அன்பான பார்வையாளர்களே, ‘பாட்ஷா’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு நன்றி. முன் எப்போதும் இல்லாத வகையில் இப்போது 4கே டால்பி அட்மாஸில் மாற்றப்பட்டு வெளியாகி இருக்கிறது. பெரிய திரையில் மாயாஜாலத்தை தவறவிடாதீர்கள்." எனக் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில் ரஜினிகாந்த் உடனான புகைப்படத்தைப் பகிர்ந்து, "அன்புள்ள ரஜினி சார். ‘பாட்ஷா’வுக்கு காரணம் நீங்கள் தான். உங்கள் அற்புதமான நடிப்பு, உங்களது திரை ஆளுமை. நீங்கள் பாட்ஷாவாக நடித்தது மட்டுமல்ல, பாட்ஷாவாகவே மாறினீர்கள். இப்போதும் திரையுலக வரலாற்றில் படத்தின் பெயர் பொறிக்கப்பட்டதற்கு காரணம் நீங்கள் தான்." எனக் கூறியுள்ளார்.

மீண்டும் ஒரு பதிவில், "புகழ்பெற்ற பாட்ஷா குழுவான ஆர்.எம்.வி சார், ரஜினி சார், நக்மா, ரகுவரன், தேவா, வைரமுத்து, பி.எஸ்.பிரகாஷ், மேகி, கணேஷ் – குமார், பாலகுமாரன், ராஜு மாஸ்டர் மற்றும் அனைத்து நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப குழுவிற்கு நன்றி. ஒரே ஒரு பாட்ஷா மட்டுமே. அது நமது ‘பாட்ஷா’ மட்டுமே!" எனப் பெருமிதம் கொண்டுள்ளார்.
பாஷா தமிழ் சினிமாவில் மாஸ் திரைப்படத்துக்கான நடையை உருவாக்கிய திரைப்படங்களுள் ஒன்று. இன்றும் இந்த இதன் உலகப் புகழ்பெற்ற வசனங்கள் பரவலாக புழக்கத்தில் உள்ளன.
பாஷாவின் மறு வெளியீடு ரஜினிகாந்த் ரசிகர்களை மகிழ்ச்சிப் பெருவெள்ளத்தில் ஆழ்த்தியிருக்கிறது!
#BaashaTurns30
— sureshkrissna (@Suresh_Krissna) July 18, 2025
It's time to celebrate 30 glorious years of an iconic film!
Thank you, dear audience, for making Baasha a legend
Now experience it like never before — in stunning 4K Dolby Atmos.
Re-releasing in theatres today! Don’t miss the magic on the big screen! …