ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை: சல்மான் கான்
ரஜினி, சூர்யா ரசிகர்கள் எங்களை ஏற்றுக்கொள்வதில்லை என்று பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.
சிக்கந்தர் பட புரமோஷன் நிகழ்ச்சியில் அவர் கூறியதாவது, ரஜினி, சிரஞ்சீவி, சூர்யா, ராம் சரண் போன்றோர் படங்கள் இங்கு வெளியாகும் போது நாங்கள் சென்று பார்க்கிறோம். அவை நன்றாக ஓடுகின்றன. ஆனால் என் படங்கள் அங்கு வெளியாகும் போது அவர்களின் ரசிகர்கள் சென்று பார்ப்பதில்லை. என்னைப் பார்க்கும் போது ரசிகர்கள் பாய், பாய் என்கிறார்கள்.
ஆனால் திரையரங்கிற்கு செல்வதில்லை. நாங்கள் இங்கு ஏற்றுக்கொள்வதைப் போல, எங்களை அங்கு ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களை திரையரங்குகளுக்கு இழுப்பது ஒரு பெரிய சவாலாகவே உள்ளது. எனது வாழ்வில் நான் தென்னிந்திய தொழில்நுட்ப வல்லுநர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளேன்.
ஒன்ஸ் மோர் - புதிய பாடல் வெளியானது!
ஆனால், எனது படங்கள் தெற்கில் வெளியாகும்போது, அவை அதே அளவிலான வெற்றியைப் பெறுவதில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். இயக்குநர் ஏ. ஆர். முருகதாஸ் நீண்ட இடைவெளிக்குப் பின் பாலிவுட்டில் சிக்கந்தர் படத்தினை மீண்டும் இயக்கியுள்ளார். இதில் நடிகர் சல்மான் கான் நாயகனாகவும் ரஷ்மிகா மந்தனா நாயகியாகவும் நடிக்கின்றனர்.
படம் வரும் மார்ச் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.