கோயில் அருகே போதைப்பொருள் விற்பனை: தடை கோரிய மனு நிராகரிப்பு!
ரஞ்சி போட்டி: ரோஹித் சர்மா தீவிர பயிற்சி!
ரஞ்சி கோப்பை போட்டியில் விளையாடவுள்ள இந்திய கிரிக்கெட் கேப்டன் ரோஹித் சர்மா தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார்.
பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் மூத்த வீரர்கள் மிகவும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே, இந்திய வீரர்கள் உள்ளூர் விளையாட்டுப் போட்டிகளில் விளையாடுவதை கட்டாயம் ஆக்கி பிசிசிஐ சமீபத்தில் விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வந்தது.
இந்த நிலையில், ஜம்மு - காஷ்மீர் அணிக்கு எதிராக நாளை (ஜன. 22) மும்பை அணி விளையாடவுள்ளது. ரஹானே தலைமையிலான இந்த அணியில் ரோஹித் சர்மா விளையாடவுள்ளதாக அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, மும்பை அணி வீரர்களுடன் தீவிர வலைப் பயிற்சியில் ரோஹித் சர்மா ஈடுபடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சமீபத்தில் ஆஸ்திரேலியா பயணித்த இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட பார்டர் - காவஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி தோல்வியை சந்தித்தது.
இதில், முதல் டெஸ்ட்டில் ரோஹித் சர்மா விளையாடவில்லை, 2-வது டெஸ்ட்டில் 9 ரன்கள், 3-வது டெஸ்ட்டில் 10 ரன்கள், 4-வது டெஸ்ட்டில் 12 ரன்கள் என மொத்தம் 31 ரன்கள் மட்டுமே எடுத்தார்.
இதனால், கடும் விமர்சனத்துக்கு உள்ளானதை தொடர்ந்து 5-வது டெஸ்ட்டில் இருந்து ரோஹித் சர்மா விலகியது குறிப்பிடத்தக்கது.