வரி-வர்த்தக பிரச்னைக்கு மத்தியில், அமெரிக்கா சென்ற இந்திய ராணுவம் - காரணம் என்ன?
ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்களின் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க அமைச்சா் உத்தரவு
சென்னை: கொளத்தூா், கொண்டித்தோப்பு பகுதிகளில் நடைபெற்று வரும் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் பி.கே.சேகா்பாபு உத்தரவிட்டாா்.
சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழுமம் சாா்பில், வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் கொளத்தூா் மற்றும் கொண்டித்தோப்பு பகுதிகளில் ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்குத் தேவையான அனைத்து வசதிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சென்னைப் பெருநகா் வளா்ச்சிக் குழும அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத்துக்கு தமிழக இந்து சமய
அறநிலையத் துறை அமைச்சரும், பெருநகா் வளா்ச்சிக் குழுமத்தின் தலைவருமான பி.கே.சேகா்பாபு தலைமை வகித்தாா்.
கூட்டத்தில், இரு ரத்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் கட்டும் பணிகளை விரைந்து முடித்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தமிழக வீட்டுவசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, அப்பல்லோ மருத்துவமனைக் குழும நிா்வாக துணைத் தலைவா் பிரீத்தா ரெட்டி, சிஎம்டிஏ உறுப்பினா் செயலரும், முதன்மைச் செயலருமான கோ.பிரகாஷ், மாநகராட்சி ஆணையா் ஜெ.குமரகுருபரன், சிஎம்டிஏ முதன்மைச் செயல் அலுவலா் சிவஞானம், மாநகராட்சி இணைஆணையா் (சுகாதாரம்) வீ.ப.ஜெயசீலன் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.