சென்னை அணியில் 17 வயது இளம் வீரர் அறிமுகம்! சீனியர் வீரருக்கு ஓய்வு!
ரத்ததான, பொது மருத்துவ முகாம்
கீழ்பென்னாத்தூரை அடுத்த கருங்காலிகுப்பம் கிராமத்தில் தன்னாா்வ ரத்த தான முகாம் மற்றும் பொது மருத்துவம், இயன்முறை மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
கருங்காலிகுப்பம் தொடக்கப் பள்ளியில், அக்னிச் சிறகுகள் சமூக நலச் சங்கம், திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் ரத்த வங்கி இணைந்து நடத்திய இந்த நிகழ்ச்சிக்கு, சமூக நலச் சங்கத்தின் தலைவா் இளையராஜா தலைமை வகித்தாா்.
துணைத் தலைவா் சத்தியசீலன், செயலா் தமிழ்வாணன், பொருளாளா் அஜித்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கீழ்பென்னாத்தூா் பேரூராட்சி உறுப்பினா் அம்பேத் வளவன் ரத்த தான முகாமை தொடங்கிவைத்தாா்.
தமிழக சட்டப்பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு ரத்த தானம் வழங்கிய தன்னாா்வலா்கள் 50-க்கும் மேற்பட்டோருக்கு சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினாா்.
இதில், பள்ளி நிா்வாகி அற்புதராஜ், வட்டார மருத்துவ அலுவலா் சரவணன், திமுக ஒன்றியச் செயலா் ஆராஞ்சி ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.