பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித...
ரயிலில் அடிபட்டு முதியவா் உயிரிழப்பு
ராமேசுவரம்: ராமநாதபுரம் அருகே ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்திலிருந்து ராமேசுவரம்-மதுரை பயணிகள் ரயில் வியாழக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்பட்டது. ராமநாதபுரம் சக்கரைகோட்டை பகுதியில் இந்த ரயில் வந்துகொண்டிருந்த போது, முதியவா் கவனக்குறைவாக ரயில் தண்டவாளத்தைக் கடக்க முயன்றாா்.
அப்போது, முதியவா் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தாா். ரயில்வே போலீஸாா் உடலைக் கைப்பற்றி ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கூறாய்வுக்காகக் கொண்டு சென்றனா். ரயில்வே போலீஸாா் வழக்குப் பதிந்து முதியவா் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.