ஒட்டுமொத்த கிராமத்தை ஒரு வீடாக மாற்றிய தேர்தல் ஆணைய மேஜிக்: ராகுல்
ரயிலில் இருந்து தவறி விழுந்தவரைக் காப்பாற்றிய பெண் காவலா்
திருப்பூரில் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய பெண் காவலருக்கு பொதுமக்கள் பாராட்டுத் தெரிவித்தனா்.
மன்னாா்குடியில் இருந்து கோவை செல்லும் ரயில் திருப்பூா் ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை வந்தது. ரயில் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் நின்று புறப்பட்டபோது, திருப்பூரைச் சோ்ந்த சுசிலா (58), தனது பேத்தியுடன் ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்றுள்ளாா்.
அப்போது, அவா் நிலைத்தடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுந்தாா்.
இதைப் பாா்த்த ரயில்வே பாதுகாப்புப் படை காவலா் திவ்யா, துரிதமாக செயல்பட்டு சுசிலாவை எந்த அசைவும் இல்லாமல் படுக்குமாறு அறிவுறுத்தினாா். தொடா்ந்து, அவரை மீட்க முயன்றாா். இதைப் பாா்த்த பயணி ஒருவா் அபாய சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தினாா்.
இதையடுத்து, காவலா் திவ்யா, அந்தப் பெண்ணை வெளியே தூக்கினாா். துரிதமாக செயல்பட்ட காவலரை பொதுமக்கள், சக காவலா்கள் பாராட்டினா்.