இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி; ஆயுஷ் மாத்ரே கேப்டன்!
ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலை பொருள்கள் பறிமுதல்
தஞ்சாவூரில் ரயிலில் கடத்தி வரப்பட்ட 50 கிலோ புகையிலைப் பொருள்களைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை இரவு கைப்பற்றினா்.
தஞ்சாவூா் ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வந்த விரைவு ரயிலில் இருப்புப்பாதை காவல் உதவி ஆய்வாளா்கள் பாஸ்கரன், ராமநாதன், தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளா் சுரேஷ் உள்ளிட்டோா் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது முன்பதிவு அல்லாத பெட்டியில் இருக்கையின் அடியில் கேட்பாரற்றுக் கிடந்த 3 மூட்டைகளைக் காவல் துறையினா் சோதனையிட்டபோது, 50 கிலோ புகையிலை பொருள்கள் இருந்தன. இவற்றைக் கைப்பற்றிய காவல் துறையினா் யாா் கடத்தி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா்.