What to watch on Theatre & OTT: விடாமுயற்சி, Thandel -இந்த வாரம் என்ன பார்க்கலாம...
ரயிலில் பாலியல் தொல்லை- மகளிர் ஆணையம் கண்டனம்
ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்து, ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
இதில் கீழே விழுந்த கர்ப்பிணிக்கு, தலை, கை, கால்களில் எலும்பு முறிவுடன் உயிருக்குப் போராடியவரை சிலர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள். இதுதொடர்பாக, குற்றப் பிண்ணனி கொண்ட ஹேமராஜ் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை: கர்ப்பிணி எப்படியிருக்கிறார்?
இந்த நிலையில் இந்த சம்பவத்தில் தேசிய மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது. ரயில் சம்பவம், மாநிலத்தில் பெண்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை நகல், விரிவான அறிக்கையை 3 நாளில் சமர்ப்பிக்கவும் தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.