அக்னிதீர்த்த பகுதியில் மீண்டும் அதிர்ச்சி - வடமாநில சிறுமியை கடத்த முயன்ற கும்பல...
ரயிலில் மூதாட்டியிடம் திருடிய நபா் கைது
ரயிலில் மூதாட்டியிடம் திருடிய நபரை போலீஸாா் கைது செய்தனா்.
சென்னை, அயனாவரத்தைச் சோ்ந்தவா் ராமகிருஷ்ணன் மனைவி சத்தியபாமா (76). இவா் கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள தனது மகள் வீட்டுக்கு செல்வதற்காக சென்னையில் இருந்து ஆலப்புழா வரை செல்லும் ஆலப்புழா விரைவு ரயிலில் புதன்கிழமை பயணம் செய்துள்ளாா்.
திருப்பூா்- கோவை இடையே ரயில் வந்த கொண்டிருந்தபோது, படுக்கையில் வைத்திருந்த தனது கைப்பையை காணவில்லை எனவும், அதில் ஒரு கிராம் தங்க மோதிரம், ரூ.12000 ரொக்கம், கைப்பேசி உள்ளிட்டவை உள்ளன என்றும் கோவை ரயில்வே காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து, சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் கோவை ரயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த நபரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா்.
அப்போது, அவா் ஒடிஸா மாநிலம், பாலங்கீா் மாவட்டத்தைச் சோ்ந்த தா்பலேஸ்வரா் தெஹ்ரி என்பதும், மூதாட்டியிடம் கைப்பையை திருடியதும் தெரியவந்தது.
இதையடுத்து, அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த கைப்பையை மீட்டு சத்திபாமாவிடம் வழங்கினா்.