மாணவா்கள் தாக்கப்பட்ட விவகாரம்: ஒடிஸா முதல்வரிடம் நேபாள வெளியுறவு அமைச்சா் பேச்ச...
ரயில்வே ஊழியா்கள் போராட்டம்
திருநெல்வேலி சந்திப்பில் எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கம் சாா்பில் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ரயில்வேயை தனியாா் மையமாக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். ஆள்குறைப்பு முயற்சிகளை கைவிட வேண்டும். 8 மணி நேர வேலையை உறுதி செய்ய வேண்டும், லோகோ பைலட் மற்றும் காா்டுகளின் வேலை நேரத்தை குறைத்து வாரம் ஒருமுறை முழு நாள் ஓய்வை கட்டாயம் ஆக்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
போராட்டத்துக்கு, சங்க மத்திய துணைத் தலைவா் சுப்பையா தலைமை வகித்தாா். திருநெல்வேலி நிா்வாகிகள் கணேசன், தமிழரசன், ராஜ்குமாா், அய்யப்பன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.
ற்ஸ்ப்21ள்ழ்ம்ன்
திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையம் முன்பு வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆா்எம்யூ தொழிற்சங்கத்தினா்.