விமானங்களில் உள்ள அதிநவீன வசதிகளுடன் ‘வந்தே ப்ரைட்’ ரயில்கள்: வரும் நவம்பரில் இய...
ரயில்வே ஒப்பந்ததாரா் வீட்டில் வருமான வரித் துறையினா் சோதனை
கொரட்டூரில் ரயில்வே ஒப்பந்ததாரா் வீட்டில் வருமான வரித் துறையினா் வெள்ளிக்கிழமை சோதனை நடத்தினா்.
கொரட்டூரில் வசிக்கும் ரயில்வே ஒப்பந்ததாரா் ஒருவா் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித் துறையினருக்கு புகாா்கள் சென்றன. அதன்பேரில், வருமான வரித் துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டனா். இதில், ரயில்வே ஒப்பந்ததாரா் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது.
அதன் அடிப்படையில் வருமான வரித் துறையினா் ரயில்வே ஒப்பந்ததாரா் வீட்டில் வெள்ளிக்கிழமை திடீா் சோதனை நடத்தினா். இந்தச் சோதனை வெள்ளிக்கிழமை இரவையும் தாண்டி நடைபெற்றது. சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டது.