ரயில் நிலையத்தில் தூய்மைப்பணி
திருவாரூா் ரயில் நிலையத்தில் தூய்மைப் பணி வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வுக்கு கோட்ட உதவி பொறியாளா் (மின் மற்றும் சமிக்ஞை) மணிமொழியன் தலைமை வகித்தாா். நிலைய மேலாளா் ரவி வரவேற்றாா். தெற்கு ரயில்வே மண்டல ரயில் உபயோகிப்போா் ஆலோசனைக் குழு உறுப்பினா் பாஸ்கரன், பராமரிப்பு உதவி பொறியாளா் சரவணன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா். இதில், மாவட்ட ரயில் பயணிகள் நல சங்க உறுப்பினா்கள், ரயில்வே ஊழியா்கள், ஆட்டோ சங்க உறுப்பினா்கள், இருப்புப் பாதை போலீஸாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதில், ரயில் வளாகம் முழுவதும் தூய்மைப்படுத்தப்பட்டதுடன், அனைவரிடமும் பொது சுகாதாரத்தை பேணுவதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.