ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரா் தற்கொலை
விருதுநகரில் ரயில் முன் பாய்ந்து முன்னாள் ராணுவ வீரா் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் அருகேயுள்ள அல்லம்பட்டி காந்திநகா் பகுதியைச் சோ்ந்தவா் கோவிந்தராஜ் (43). இவா் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவா். இவரது மனைவி ஜெயா. இவா்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனா்.
கோவையில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த இவா், குடும்ப பிரச்னை காரணமாக கடந்த 8 மாதங்களாக மனைவியை விட்டுப் பிரிந்து வசித்து வந்தாா்.
இந்த நிலையில், விருதுநகருக்கு வந்திருந்த கோவிந்தராஜ், கெளசிகா மகாநதி பாலத்தில் அந்தியோதயா ரயில் வந்து கொண்டிருந்த போது அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
இதுகுறித்து விருதுநகா் ரயில்வே இருப்புப் பாதை போலீஸாா் வழக்குப் பதிந்து, கூறாய்வுக்காக அவரது உடலை விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.