செய்திகள் :

ரஷியாவில் ஜெய்சங்கர்! இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை

post image

ரஷியாவின் முதல் துணைப் பிரதமர் டெனிஸ் மண்டுரோவின் அழைப்பை ஏற்று, வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், அரசு முறைப் பயணமாக அந்நாட்டுக்குச் சென்றுள்ளார்.

இந்நிலையில், வரும் ஆக.21 ஆம் தேதி வரையிலான இந்த மூன்று நாள் பயணத்தில், ரஷியா மற்றும் இந்தியா இடையிலான கூட்டுறவு மற்றும் ஒத்துழைப்பு குறித்த பேச்சுவார்த்தை நடைபெறும் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்த பயணத்தில், அமைச்சர் ஜெய்சங்கர், ரஷியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் செர்ஜெய் லாவ்ரோவை நேரில் சந்தித்து பேசவுள்ளார். வரும் ஆக.20 ஆம் தேதி, மாஸ்கோவில் நடைபெறும், இந்தியா - ரஷியா அரசுகளுக்கு இடையிலான வர்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்பு ஆணையத்தின் 26-வது அமர்வில் எஸ். ஜெய்சங்கர் கலந்துக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஷியாவுடன் இந்தியா மேற்கொள்ளும் எண்ணெய் வர்த்தகத்தினால், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 50 சதவிகிதம் வரி விதித்துள்ள நிலையில், இந்தப் பயணத்தில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்படும் பேச்சுவார்த்தை முக்கியத்துவம் பெறுகிறது.

Jaishankar arrives in Moscow on an official visit to Russia.

கண்டன அறிக்கைக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை: ஆம்புலன்ஸ் உரிமையாளர்கள் சங்கம்

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம் தெரிவிப்பதாக வெளியான அறிக்கைக்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் விளக்கம் அளித்துள்... மேலும் பார்க்க

3 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழகத்தில் 3 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை சைபர் கிரைம் பிரிவு துணை ஆணையராக ஸ்ரீநாதா ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள... மேலும் பார்க்க

எதேச்சதிகாரத்துக்கு எதிராக சுதர்சன் ரெட்டி சரியான தேர்வு: மு.க. ஸ்டாலின்

இந்தியா கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சுதர்சன் ரெட்டிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,''நேர்ம... மேலும் பார்க்க

34 நாள்களில் 100 தொகுதிகள்... இபிஎஸ்ஸின் சுற்றுப்பயணம்!

மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம், சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று(ஆக. 19) தனது 100வது தொகுதியான ஆற்காட்டுக்குச் சென்றடைந்துள்ளா... மேலும் பார்க்க

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்கக்கோரி ரயில் மறியல்!

இலங்கை சிறையில் உள்ள மீனவர்கள் மற்றும் படகுகளை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் உள்ள மீனவர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.பதாகையை ஏந்த... மேலும் பார்க்க

மதுரையில் விஜய்: தவெக மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு நாளை மறுநாள்(ஆக. 21) நடைபெறவுள்ள நிலையில், மதுரை சென்றடைந்தார் தவெக தலைவர் விஜய். மேலும் பார்க்க