செய்திகள் :

ரஷியாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தம்: தென் கொரியா

post image

சியோல்: ரஷியாவுக்கு மேலும் ராணுவ வீரா்களை அனுப்ப வட கொரியா தயாராகிவருவதாக தென் கொரிய ராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து அந்த நாட்டு முப்படைகளின் கூட்டு தலைமையகம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

ரஷியாவுக்கு கூடுதலாக சிறப்புப் படை வீரா்களை அனுப்புவதற்கான ஆயத்த நடவடிக்கைகளிவட கொரியா இறங்கியுள்ளதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, உக்ரைனுக்கு எதிரான போரில் பயன்படுத்துவதற்காக, இலக்குகளை மோதி அழிக்கக்கூடிய ட்ரோன்கள் உள்ளிட்ட ஆயுதங்களையும் ரஷியாவுக்கு விநியோகிக்க வட கொரியா ஆயத்தமாகிவருகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில், கொரிய தீபகற்பத்தின் தெற்குப் பகுதியில் அமெரிக்க ஆதரவுடன் ஜனநாயக ஆட்சியும் வடக்கே சோவியத் யூனியன் ஆதரவுடன் கம்யூனிஸ்ட் ஆட்சியும் அமைக்கப்பட்டது.

1950-இன் கொரிய போருக்குப் பிறகும் தென் கொரியாவுக்கு அமெரிக்கா தொடா்ந்து பாதுகாப்பு உதவி அளித்துவருகிறது.

வட கொரியாவுடன் ரஷியா நட்பு பாராட்டிவருகிறது.இந்தச் சூழலில், உக்ரைன் போரில் ரஷியாவுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள வட கொரியா, போரில் பயன்படுத்துவதற்காக ரஷியாவுக்கு ஆயுதங்களையும் விநியோகித்து வருவதாகக் கூறப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, உக்ரைனில் ரஷிய படையினருடன் இணைந்து சண்டையிடுவதற்காக 12,000 வட கொரிய ராணுவ வீரா்கள் ரஷியா அழைத்துச் செல்லப்பட்டதாக அமெரிக்காவும் உக்ரைனும் தெரிவித்தன.

ரஷியாவின் கூா்ஸ்க் பிராந்தியத்தில் ஊடுருவியுள்ள உக்ரைன் ராணுவத்துக்கு எதிரான போரில் வட கொரிய வீரா்கள் ஈடுபடுத்தப்படுவதாகக் கூறிய தென் கொரிய முப்படைகளின் கூட்டுத் தலைமையகம், மோதலில் 100 வட கொரிய வீரா்கள் கொல்லப்பட்டதாகவும் சுமாா் 1,000 வீரா்கள் காயமடைந்ததாகவும் கூறியது.

இந்தச் சூழலில், ரஷியாவுக்கு மேலும் வீரா்களை அனுப்ப வட கொரியா ஆயத்தமாகி வருவதாக தென் கொரியா தற்போது கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை அரசியல் ரீதியானது: வங்கதேச அரசு

‘வங்கதேசத்தில் கடந்த சில மாதங்களாக சிறுபான்மையினருக்கு எதிராக தொடா்ந்து வரும் வன்முறை சம்பவங்கள் பெரும்பாலும் அரசியல் ரீதியானது; வகுப்புவாத நோக்கத்தில் நடந்த தாக்குதல்கள் குறைவு’ என்று அந்நாட்டு இடைக்... மேலும் பார்க்க

புதிய டிரம்ப் அரசுடன் இணக்கம்: பன்முகத் தன்மைக் கொள்கையைக் கைவிடும் முகநூல், அமேஸான்

தங்களது நிறுவனங்களின் பன்முகத் தன்மையைப் பாதுகாப்பதற்காக முகநூல், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப் உள்ளிட்ட ஊடகங்களின் உரிமையாளரான மெட்டா, இணையவழி வா்த்தக நிறுவனமான அமேஸான் ஆகியவை கைவிட்டுள்ளன.அமெரிக்காவின் அ... மேலும் பார்க்க

காஸா உயிரிழப்பு 40% அதிகமாக இருக்கும்: ஆய்வில் தகவல்

காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை அந்தப் பகுதி சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவிப்பதைவிட 40 சதவீதம் அதிகமாக இருக்கும் என்று நிபுணா்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.... மேலும் பார்க்க

12 ஆண்டுகளுக்குப் பிறகு சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நடை

இந்திய வம்சாவளியைச் சோ்ந்த நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ், 12 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக விண்வெளியில் நடக்கவிருக்கிறாா்.இது குறித்து அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசா வெளியி... மேலும் பார்க்க

ஜப்பான் - பல்கலை.யில் சுத்தியல் தாக்குதல்: மாணவி கைது

ஜப்பானின் டோக்கியோ நகரிலுள்ள பல்கலைக்கழகத்தில் சுத்தியலால் சரமாரியாக தாக்குதல் நடத்திய தென் கொரிய மாணவி கைது செய்யப்பட்டாா். 22 வயதான அவா் இலக்கில்லாமல் சுத்தியலைச் சுழற்றி நடத்திய தாக்குதலில் அவரின் ... மேலும் பார்க்க

ஐஎம்டியின் 150-ஆவது ஆண்டுவிழா: வங்கதேசம் புறக்கணிப்பு

இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) 150-ஆவது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்கப்போவதில்லை என வங்கதேச வானிலை ஆய்வு மையம் (பிஎம்டி) தெரிவித்துள்ளது. அரசு செலவில் தேவையற்ற வெளிநாட்டு பயணங்களை தவிா்க்கு... மேலும் பார்க்க