வில் ஜாக்ஸ் அரைசதம்; குஜராத் டைட்டன்ஸுக்கு 156 ரன்கள் இலக்கு!
ரஷியா மீது உக்ரைன் டிரோன் தாக்குதல்! தலைநகரில் விமான சேவைகள் நிறுத்தம்!
ரஷியா மீதான உக்ரைனின் டிரோன் தாக்குதல்களினால், அந்நாட்டின் தலைநகரிலுள்ள விமான நிலையங்களில் விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ரஷியாவின் பல்வேறு நகரங்களின் மீது உக்ரைனின் நூற்றுக்கணக்கான டிரோன்கள் தாக்குதல்கள் நடத்தியுள்ளன. இதனால், அந்நாட்டின் தலைநகர் மாஸ்கோவிலுள்ள 4 விமான நிலையங்களிலும் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக ரஷியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, 2 வது நாள் இரவாக நேற்று (மே.5) ரஷியாவின் மீது உக்ரைனின் டிரோன்கள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதனால், இருநாடுகளின் எல்லையிலுள்ள பகுதிகள் மற்றும் ரஷியாவின் மத்தியப் பகுதிகளிலும் உள்ள விமான நிலையங்களில் விமானப் போக்குவரத்து தற்காலிகமாகத் துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்களினால் ரஷியாவின் குர்ஸ்க் மாகாணத்தில் 2 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும், வோரோனெஸ் மாகாணத்தின் சில பகுதிகள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியதாகவும் கூறப்பட்டுள்ளது. ஆனால், இந்தத் தகவல்கள் யாவும் உறுதிச் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, இரண்டாம் உலகப் போரில் ரஷியா உள்ளிட்ட நேச நாடுகள் நாஜி ஜெர்மனியை வெற்றிக்கொண்ட நாள் வரும் மே.8 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது.
இதனால், ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் மே.8 முதல் 72 மணிநேர போர்நிறுத்தத்தை அறிவித்திருந்த சூழலில் இந்தத் தாக்குதலானது நடத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: புதிய போப் தேர்தல்: வாடிகனில் தொலைத்தொடர்பு சேவை துண்டிப்பு!