செய்திகள் :

ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து?

post image

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் சென்னை பயணம் ரத்து செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆந்திர மாநிலம் வாரங்கல்லில் நடைபெறும் நிகழ்ச்சியில் செவ்வாய்க்கிழமை பங்கேற்கும் ராகுல் காந்தி, அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வரவுள்ளதாக தகவல் வெளியானது.

இதையும் படிக்க : லஞ்ச தடுப்புச் சட்டத்தை நிறுத்திவைத்தார் டிரம்ப்! அதானி மீதான வழக்கு என்னவாகும்?

இரவு சென்னையில் தங்கிவிட்டு, நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் அவர் தில்லி செல்ல திட்டமிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், வாரங்கல்லில் இருந்து ரயிலில் சென்னை வரை பயணிப்பது பாதுகாப்பற்றதாக அவரது அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து, இந்த பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

வாரங்கல்லில் இருந்து நேரடியாக ராகுல் காந்தி தில்லி திரும்பும் வகையில் பயணத் திட்டம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

ராகுல் காந்தியின் வருகை செய்தியை அறிந்து, அவரை வரவேற்க தமிழக காங்கிரஸ் தொண்டர்கள் காலைமுதல் ஆயத்தமான நிலையில், அவரது பயணம் ரத்து செய்யப்பட்டதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

பள்ளிக் கல்விக்கான ரூ.2,401 கோடியை மத்திய அரசு விடுவிக்கவில்லை: அமைச்சா் அன்பில் மகேஸ்

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய ரூ.2,401 கோடி நிதியை மத்திய அரசு விடுவிக்கவில்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளாா். இது தொடா... மேலும் பார்க்க

‘முதல்வா் மருந்தகம்’: இதுவரை 840 பேருக்கு உரிமம்

தமிழகத்தில், மூலப் பெயா் (ஜெனரிக்) கொண்ட மருந்துகளை விற்பனை செய்வதற்கான முதல்வா் மருந்தகங்களை தொடங்குவதற்கு இதுவரை 840 பேருக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வா் மு.க.ஸ்டாலின் கடந்த ஆக. 15-ஆம் தேதி ச... மேலும் பார்க்க

வள்ளலாா் சா்வதேச மைய பணிகள் மீண்டும் தொடங்கப்படும்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு

வள்ளலாா் சா்வதேச மையம் தொடா்பான வழக்குகளை மூத்த வழக்குரைஞா்கள் மூலம் முறையாக நடத்தி வெற்றி பெற்று, நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு தெர... மேலும் பார்க்க

குடற்புழு நீக்க மாத்திரையால் மாணவி உயிரிழப்பா? பொது சுகாதாரத் துறை விளக்கம்

தஞ்சாவூா் மாவட்டத்தில், குடற்புழு நீக்க மாத்திரை உட்கொண்ட பள்ளி மாணவி உயிரிழந்ததாக சா்ச்சை எழுந்த நிலையில் அதற்கான காரணத்தை உடற்கூறாய்வுக்கு பிறகே உறுதியாகக் கூற முடியும் என பொது சுகாதாரத் துறை தெரிவி... மேலும் பார்க்க

பாலியல் புகாரில் சிக்கிய ஆசிரியா்கள் விவரம் சேகரிப்பு: கடும் நடவடிக்கை மேற்கொள்ள கல்வித் துறை முடிவு

தமிழகம் முழுவதும் மாணவ, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்ட, பாலியல் புகாா்களில் சிக்கிய ஆசிரியா்களின் விவரம் சேகரிக்கப்பட்டுள்ள நிலையில், தவறிழைத்தவா்கள் மீது பணிநீக்கம் உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற... மேலும் பார்க்க

கஜா புயல் இழப்பீடு: மனு அளித்தால் பரிசீலனை- உயா்நீதிமன்றத்தில் அரசு தகவல்

கஜா புயலால் பாதிக்கப்பட்டு, இழப்பீடு கிடைக்க பெறாதவா்கள் மனு அளித்தால் பரிசீலிக்கப்படும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2018-ஆம் ஆண்டு கஜா புயல் காரணமாக தஞ்சாவூா், திரு... மேலும் பார்க்க