செய்திகள் :

ராகுல் காந்தி மட்டுமல்ல.. அவரின் 4-ஆம் தலைமுறையாலும் சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது: அமித் ஷா!

post image

சட்டப்பிரிவு 370-ஐ ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப் பின் வருங்கால சந்ததியினர் யாராலும் கொண்டுவர முடியாது என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மகாராஷ்டிரத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் நவம்பர் மாதம் 20 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்தலுக்கான பிரசாரப் பேரணிகள் நடைபெற்றுவருகின்றன. மேலும், இந்தப் பிரசாரப் பேரணியில் முக்கியத் தலைவர்கள் தங்கள் கட்சிக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.

மகாராஷ்டிரத்தின் சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்டு வாக்குகளைச் சேகரித்தார்.

அப்போது மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்பியுமான ராகுல் காந்தி மட்டுமல்ல, அவருக்குப்பின்னர் அவரின் வருங்கால சந்ததிகளால்கூட கொண்டுவர முடியாது என்று தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவையில் மாநில சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ மீட்டெடுக்க புதியதாக தேர்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும், மத்திய அரசுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சங்க்லி தொகுதியில் நடந்த பிரசாரத்தில் ஆளும் கட்சியான மஹாயுதியின் வேட்பாளர்கள் சுதிர் காடில் மற்றும் சஞ்சய் காகா பாட்டீல் ஆகியோரை ஆதரித்து அமைச்சர் அமித் ஷா வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

பிரசாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், “சத்ரபதி சிவாஜியின் மண்ணில் இருந்து சொல்கிறேன். ராகுலால் மட்டுமல்ல, அவரின் நான்காம் தலைமுறையால்கூட சட்டப்பிரிவு 370-ஐ கொண்டுவர முடியாது” என்றார்.

ராகுல் காந்தி அரசியலமைப்பையும், அம்பேத்கரையும், அவரை தேர்தெடுத்த மக்களையும் அவமானப்படுத்தியுள்ளார். ராகுல் காந்தி சமீபத்தில் இடஒதுக்கீடு வேண்டாம் என்று தெரிவித்திருந்தார். மோடி அரசு இருக்கும் வரை யாராலும் அரசியலமைப்பு மீது கைவைக்கமுடியாது. எஸ்சி, எஸ்டி, இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடுகள் இருந்தபடியே இருக்கும்” என்றார்.

மகராஷ்டிரத்தில் நவம்பர் 20 ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தலும், நவம்பர் 23 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மணிப்பூா் பழங்குடியின கிராமத்தில் தீவிரவாதிகள் தாக்குதல்: 6 வீடுகள் தீக்கிரை; பெண் உயிரிழப்பு?

மணிப்பூரில் குகி-ஸோ பழங்குடியினா் வாழும் கிராமத்தில் ஆயுதங்களுடன் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினா். 6 வீடுகளை தீக்கிரையாக்கிய அவா்கள், கிராம மக்கள் மீதும் தாக்குதல் நடத்தினா். இதில் பெண் ஒருவ... மேலும் பார்க்க

ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேத சிகிச்சை: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஆயுஷ்மான் பாரத் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் யோகா, ஆயுா்வேதம் மற்றும் இயற்கை மருத்துவ சிகிச்சைகளை சோ்க்கக் கோரிய மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் அ... மேலும் பார்க்க

டிரம்ப்புக்கு ராகுல் வாழ்த்து கடிதம்: இந்திய ஒத்துழைப்பு மேம்படுமென நம்பிக்கை

அமெரிக்க அதிபா் தோ்தலில் வெற்றி பெற்றுள்ள டொனால்ட் டிரம்ப்புக்கு மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வாழ்த்து கடிதம் எழுதியுள்ளாா். அண்மையில் நடைபெற்ற அமெரிக்க அதிபா் தோ்தலில் குடியரசுக் கட்சி... மேலும் பார்க்க

பெண்களுக்கு ஆண்கள் முடிவெட்ட, ஆடை அளவெடுக்க தடை வேண்டும்! உ.பி. அரசுக்கு மகளிா் ஆணையம் பரிந்துரை

தையல் கடைகளில் பெண்களுக்கு ஆடை அளவெடுப்பது, பெண்களுக்கு முடிதிருத்தம் செய்வது, உடற்பயிற்சி நிலையங்களில் பெண்களுக்கு பயிற்சி வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளில் ஈடுபட ஆண்களுக்குத் தடை விதித்து சட்டம் இ... மேலும் பார்க்க

பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவில் ‘இறுதிச் சடங்கு’: குஜராத் தொழிலதிபரின் வினோத செயல்

குஜராத்தைச் சோ்ந்த தொழிலதிபா் ஒருவா் தனக்கு சொந்தமான பழைய காருக்கு ரூ.4 லட்சம் செலவு செய்து இறுதிச் சடங்குகள் நடத்தி அடக்கம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது. குடும்பத்துக்கு அதிருஷ்டம் தந்த காரை த... மேலும் பார்க்க

ஏகபோகத்துக்கு வழிவகுத்த பண மதிப்பிழப்பு நடவடிக்கை: ராகுல் காந்தி

பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்து, ஏகபோக உரிமைக்கு வழிவகுத்தது என்று மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தி வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா். பண மதிப்பி... மேலும் பார்க்க