செய்திகள் :

ராஜபாளையம்: தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் கிணற்றில் தள்ளி கொலை - காப்பக இளைஞரிடம் போலீஸ் விசாரணை!

post image

ராஜபாளையத்தில் உள்ள ஆதரவற்றோர் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை அதே காப்பகத்தை சேர்ந்த இளைஞர் கிணற்றில் தள்ளி கொலை செய்த சம்பவம், சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே ஆசிரியர் குடியிருப்பில் தனியாருக்கு சொந்தமான ஆதரவற்றோர் காப்பகம் இயங்கி வருகிறது. கணவர் கைவிட்டு சென்ற நிலையில், இரண்டு மகன்களுடன் தனியே வசித்து வந்த வெண்ணிலா எனும் பெண், தன்னுடைய பிள்ளைகளை வளர்க்க முடியாத காரணத்தால் இந்த காப்பகத்தில் விட்டுவிட்டு திருப்பூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார்.

அதன்படி, வெண்ணிலாவின் இளைய மகன் சாய் சஞ்சீவி (வயது 6). தற்போது, ஒன்றாம் வகுப்பு படித்து முடித்த நிலையில் கோடை விடுமுறையில் காப்பகத்தில் தங்கியிருந்தான். இந்தநிலையில், நள்ளிரவில் காப்பகத்தில் தூங்கிக்கொண்டிருந்த சிறுவன், திடீரென மாயமாகியுள்ளான். இதனை அதிகாலை வேளையில் கவனித்த காப்பக பணியாளர்கள் சாய் சஞ்சீவ்வை நாலாபுறமும் தேடி பார்த்துள்ளனர். தொடர்ந்து காப்பகத்துக்கு அருகே உள்ள விவசாய தோட்டத்தில் தேடிப்பார்த்தபோது, தோட்டத்துக்குள் உள்ள கிணற்றுக்கு அருகிலிருந்து காப்பகத்தில் பணி செய்யும் நவீன்(22)எனும் இளைஞர் வருவதை கவனித்துள்ளனர். இதையடுத்து அவரை வழி மறித்து சிறுவன் குறித்து கேட்டபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சந்தேகத்தின்பேரில் விவசாய கிணற்றை‌ காப்பக பணியாளர்கள் எட்டி பார்த்துள்ளனர். அப்போது, சிறுவன் சாய் சஞ்சீவ் தண்ணீரில் சடலமாக மிதப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உடனே இதுகுறித்து ராஜபாளையம் போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், சிறுவன் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பான புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீஸ், சந்தேகத்தின்‌ அடிப்படையில் நவீனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது போலீஸின்‌ விசாரணையில், நள்ளிரவில் காப்பகத்தின் பின்பக்கக்கதவு வழியாக உள்ளே புகுந்த நவீன், தூங்கிக்கொண்டிருந்த சிறுவன் சாய் சஞ்சீவ்வை தூக்கிச்சென்று அருகே உள்ள தோட்டத்தின் விவசாய கிணற்றில் தள்ளி கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தநிலையில், நவீன் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக நவீனிடம் போலீஸார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்றனர்.

திருச்சி: கடன் பிரச்னை? 2 குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து தம்பதி; என்ன நடந்தது?

திருச்சி, மேல கல்கண்டார் கோட்டையைச் சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 42). இவர், கடந்த சில வருடங்களுக்கு முன்பு துணிக்கடை நடத்தி வந்தார். இவருக்கு விக்டோரியா (வயது: 35) என்ற மனைவியும் ஆராதனா (வயது: 9), ஆலியா (... மேலும் பார்க்க

தாய், தந்தை உட்பட உறவினர்கள் 4 பேரைக் கோடரியால் கொன்ற வழக்கு; கேரள இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

கேரள மாநிலம், திருவனந்தபுரம் நந்தன்கோடு க்ளப்ஹவுஸ் அருகே வசித்து வந்தவர் ராஜாதங்கம். இவர் கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்துவந்தார். அவரது மனைவி... மேலும் பார்க்க

நாகை சிறுமி மர்மச் சாவு? ஆட்சியர் அலுவலகத்தில் பெற்றோர் போராட்டம்; ஜன்னலில் எட்டிப் பார்த்த கலெக்டர்

கடலூர் மாவட்டம் வடலூரைச் சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் இளைஞர் ஒருவரைக் காதல் திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.இந்த நிலையில் இருவரும் ரயில் மூலம் வேளாங்கண்ணிக்குச் சென்றுள்ளனர். இதில் வேளாங... மேலும் பார்க்க

சென்னை: அரசு மருத்துவமனையில் நோயாளியிடம் நகை திருட்டு; சிசிடிவி-யால் சிக்கிய பெண்!

சென்னை சேத்துப்பட்டு, மங்களபுரம் பகுதியில் குடியிருந்து வருபவர் சுகந்தி. இவரின் அம்மா ஷீலா. இவருக்கு உடல் நலம் சரியில்லாததால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டிருக்கி... மேலும் பார்க்க

Punjab: விஷ சாராயம் குடித்து 14 தொழிலாளர்கள் உயிரிழப்பு.. நடந்தது என்ன?

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகில் உள்ள பங்கலி, பாதல்புரி, மராரி கலன், தெரேவால் மற்றும் தல்வண்டி குமான் போன்ற கிராமங்களில் விஷச்சாராயம் குடித்து 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உடல்நலம் பாதிக்கப்பட்... மேலும் பார்க்க

`பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுறேன்' - INS விக்ராந்த் லொகேஷன் கேட்ட இளைஞர் கைது.. என்ன நடந்தது?

காஷ்மீர் பஹல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலைத் தொடர்ந்து ஆப்பரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துவருகிறது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும் எல்லையில் பாகிஸ்தானின்... மேலும் பார்க்க