ராஜிநாமா முடிவு? செந்தில் பாலாஜிக்கு பதிலாக மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி
சென்னை: உயிரி மருத்துவக் கழிவுகளைக் கொட்டுவோருக்கான தண்டனை விவரங்கள் தொடர்பான மசோதாவை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மாற்றாக, அமைச்சர் ரகுபதி சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்துள்ளார்.
ஒருவேளை, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜிநாமா செய்துவிடுவாரோ என்றும், ஒருவேளை அவர் ராஜிநாமா செய்துவிட்டால், இன்று தாக்கல் செய்யப்படும் மசோதா மீது ஏப். 29ஆம் தேதி விவாதம் நடைபெற்றால், செந்தில் பாலாஜியால் பதிலளிக்க முடியாது என்பதால்தான், மாற்று ஏற்பாடாக, இன்று அமைச்சர் ரகுபதி, மசோதாவை தாக்கல் செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.