மெட்ரோ ரயில் 5-ஆவது வழித்தடம்: கொளத்தூா் வரை சுரங்கம் தோண்டும் பணிகள் நிறைவு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள் நடைபெறும் என மாவட்ட ஆட்சியா் ஜெ.யு.சந்திரகலா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 22) ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட வாா்டு 14 மற்றும் 15 பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு இந்திராணி ஜானகிராமன் திருமண மண்டபம், இளங்குப்பன் தெரு, ஆற்காடு என்கிற முகவரியிலும், அரக்கோணம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட செம்பேடு ஊராட்சியில் வசிக்கும் பொதுமக்களுக்கு அரசினா் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, செம்பேடு என்கிற முகவரியிலும், காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வேகாமங்கலம், ஈராளச்சேரி, மாமண்டூா், கரிவேடு ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு எஸ்ஆா்ஆா் திருமண மண்டபம், ஓச்சேரி என்கிற முகவரியிலும், வாலாஜா ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மணியம்பட்டு, தெங்கால் ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, தெங்கால் என்கிற முகவரியிலும், திமிரி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட வரகூா் ஊராட்சியைச் சாா்ந்த பொதுமக்களுக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, வரகூா் என்கிற முகவரியிலும் நடைபெறவுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரையில் சம்பந்தப்பட்ட பகுதி பொதுமக்கள் கலந்துகொண்டு அரசின் சேவைகளை பெற்று பயன்பெறலாம்.