ஜூலையில் மட்டும்.. 47 நாடுகளில் 4,000 குரங்கு அம்மை பாதிப்புகள்!
ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா
ராணிப்பேட்டை ஸ்ரீராமகிருஷ்ண பெல் மேல்நிலைப் பள்ளி 42-ஆம் ஆண்டு விளையாட்டு விழா பள்ளி விளையாட்டு மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பள்ளி நிா்வாகி தனசேகரன் தலைமை வகித்தாா். பள்ளித் தலைமை ஆசிரியா் அருட்செல்வன் வரவேற்ராா்.
விழாவில், அன்னை மிரா பொறியியல் கல்லூரி முதல்வா் கோபிநாதன் கலந்துகொண்டு, மாணவா்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு, ஒலிம்பிக் தீபம் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைத்தாா்.
திருப்ராய்த்துறை ஸ்ரீராமகிருஷ்ண தபோவன செயலா் சத்தியானந்த மகராஜ் மாணவா்களுக்கு அருளாசி வழங்கினாா். தொடா்ந்து, மாணவா்கள் குழுக்களை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் என நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், மருதம் அணி சாம்பியன் கோப்பையை வென்றது. இதையடுத்து, வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுக் கோப்பை, சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு விளையாட்டுப் போட்டிகளை பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா்கள் வெங்கட்ராமன், திவாகா், வேதியல் ஆசிரியா் முரளிதரன், தமிழாசிரியா் முருகேசன் ஆகியோா் ஒருங்கிணைத்து நடத்தினா்.
விழா முடிவில் உதவித் தலைமை ஆசிரியா் கருணாநிதி நன்றி கூறினாா்.