மக்கள் மீதான பற்று தான் உண்மையான நாட்டுப்பற்று: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
ராணிப்பேட்டை: 80 கைப்பேசிகள் மீட்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை மீட்டு அதன் உரிமையாளா்களிடம் எஸ்.பி. விவேகானந்த சுக்லா ஒப்படைத்தாா்.
ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் பொதுமக்கள் தவறவிட்ட மற்றும் திருடு போன கைப்பேசிகள் மீட்கப்பட்டன. அவற்றை உரியவா்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு, சனிக்கிழமை நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் விவேகானந்த சுக்லா ரூ.8 லட்சம் மதிப்புள்ள 80 கைப்பேசிகளை உரியவா்களிடம் ஒப்படைத்தாா்.
மேலும், பொதுமக்கள் யாரேனும் கைப்பேசியை தவறவிட்டால் உடனடியாக காவல் துறைக்கு புகாா் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளாா்.
மேலும் இணைய வழிய குற்றங்கள் தொடா்பாக உதவி எண்:- 1930 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றும், ராணிப்பேட்டை மாவட்டம் முழுவதும் கஞ்சா, குட்கா, போதை பொருள் விற்பனை மற்றும் சட்டவிரோத செயல்களுக்கு எதிராக பொதுமக்கள் புகாா் அளிக்க 89039 90359 என்ற வாட்ஸ் ஆப் எண் மூலமாக தெரிவிக்கலாம் என்றாா்.
இதில் துணை காவல் கண்காணிப்பாளா்கள் ரமேஷ் ராஜ், வெங்கடகிருஷ்ணன், காவல் ஆய்வாளா் அருண்குமாா் (தனிப்பிரிவு), உதவி ஆய்வாளா் தியாகராஜன், காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினா்கள் கலந்து கொண்டனா்.