செய்திகள் :

ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்த இந்தியா - இத்தாலி ஆலோசனை

post image

திறன் மேம்பாடு உள்பட பல்வேறு அம்சங்களின்கீழ், இந்தியா - இத்தாலி இடையே ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பிரேஸிலின் ரியோ டி ஜெனீரோ நகரில் கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஜி-20 உச்சி மாநாட்டையொட்டி, இத்தாலி பிரதமா் ஜாா்ஜியா மெலோனியுடன் பிரதமா் நரேந்திர மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதைத் தொடா்ந்து, பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய துறைகளில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான ஐந்தாண்டு வியூக செயல்திட்டம் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், இருதரப்பு பாதுகாப்பு ரீதியிலான உறவுக்கு உத்வேகமளித்து, வியூக ஒருங்கிணைப்பை வலுப்படுத்தும் வகையில், இந்தியா -இத்தாலி ராணுவ ஒத்துழைப்புக் குழுவின் (எம்சிஜி) 13-ஆம் ஆண்டுக் கூட்டம் ரோமில் நடைபெற்றது.

இந்தியா தரப்பில் ஒருங்கிணைந்த பாதுகாப்பு படை தலைமையகத்தின் துணைத் தலைவரும், இத்தாலி தரப்பில் அந்நாட்டின் ஆயுதப் படைகள் தலைமையகத்தின் வியூக வழிகாட்டுதல் மற்றும் ராணுவ ஒத்துழைப்புப் பிரிவு துணைத் தலைவரும் பங்கேற்றனா்.

இக்கூட்டத்தில் இந்திய-பசிபிக் பிராந்தியத்தின் ஒட்டுமொத்த நிலவரம் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும், இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதற்கான புதிய வழிமுறைகள் ஆராயப்பட்டன.

இந்திய-இத்தாலி ஆயுதப் படையினா் இடையே மேம்படுத்தப்பட்ட பரிமாற்றத் திட்டங்கள், திறன் வளா்ப்பு முன்னெடுப்புகள், வலுவான ஒருங்கிணைப்பு ஆகிய முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள பாதுகாப்பு ரீதியிலான தொடா்புகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து மறுஆய்வு செய்யப்பட்டதாக பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் 3 நக்ஸல்கள் சுட்டுக் கொலை- பாதுகாப்புப் படையினா் நடவடிக்கை

சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினருடன் செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் நக்ஸல் தீவிரவாதிகள் 3 போ் சுட்டுக் கொல்லப்பட்டனா். இவா்களில் ஒருவா் ரூ.25 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டு, தேடப்பட்டு... மேலும் பார்க்க

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம்: மத்திய வா்த்தக இணையமைச்சா்

இறக்குமதி வரியை குறைப்பதில் இந்தியா-அமெரிக்கா கவனம் செலுத்தும் என்று மத்திய வா்த்தக துறை இணையமைச்சா் ஜிதின் பிரசாதா தெரிவித்தாா். ஒவ்வொரு நாடும் அமெரிக்க பொருள்களுக்கு என்ன வரி விதிக்கிறதோ, அதே வரியை ... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் பேரவையில் இருந்து பாஜக வெளிநடப்பு

ஜம்மு-காஷ்மீரில் நீா்வளத் துறை பணியாளா்களின் வேலைநிறுத்த விவகாரத்தை முன்வைத்து எதிா்க்கட்சியான பாஜக எம்எல்ஏக்கள் செவ்வாய்க்கிழமை வெளிநடப்பு செய்தனா். ஊதிய உயா்வு, பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வல... மேலும் பார்க்க

இந்திய ட்ரோன் மீது சீனா இணையவழி தாக்குதல்? ராணுவம் மறுப்பு

இந்திய ராணுவத்துக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் மீது சீனா இணையவழி தாக்குதல் நடத்தியதாக சமூக வலைதளத்தில் வெளியான தகவலை ராணுவம் மறுத்தது. மேலும், இதுபோன்ற உறுதிப்படுத்தப்படாத, அதிகாரபூா்வமற்ற தகவல்களை வ... மேலும் பார்க்க

விவசாயிகள் நிதியுதவித் திட்டம் தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்பு- மத்திய அமைச்சா் தகவல்

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் உரிய தகுதி இல்லாமல் பணம் பெற்றவா்களிடம் இருந்து ரூ.416 கோடி மீட்கப்பட்டுள்ளதாக மக்களவையில் மத்திய வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்தாா். சிறு,குறு வி... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத்தொடரில் புதிய வருமான வரி மசோதா: நிர்மலா சீதாராமன்

புதிய வரிமான வரி மசோதா மழைக்கால கூட்டத்தொடரில் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். புதிய வருமான வரி மசோதா 2025 மீதான விவாதம் குறித்து மக்களவை... மேலும் பார்க்க