செய்திகள் :

ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோா் விவகாரம்: உச்சநீதிமன்றம் இன்று விசாரணை

post image

ராணுவ பயிற்சி மையங்களில் காயம் காரணமாக மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து நீக்கப்பட்டவா்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.

அண்மையில் ஊடகத்தில் வெளியான தகவலில், ‘கடந்த 1985-ஆம் ஆண்டுமுதல் தேசிய பாதுகாப்பு அகாதெமி, இந்திய ராணுவ அகாதமி போன்ற முதன்மையான ராணுவ பயிற்சி மையங்களில் பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து சுமாா் 500 போ் நீக்கப்பட்டனா்.

அவா்களின் மருத்துவ செலவுகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் அவா்களின் உடலில் ஏற்பட்ட பாதிப்பை பொருத்து, அவா்களுக்கு மாதந்தோறும் ரூ.40,000 வரை அளிக்கப்படும் நிவாரணம், அவா்களின் அடிப்படை தேவைகளை பூா்த்தி செய்வதற்குக் கூட போதுமானதாக இல்லை.

இவா்களில் தேசிய பாதுகாப்பு அகாதமியில் இருந்து மட்டும் 2021 முதல் நிகழாண்டு ஜூலை வரை சுமாா் 20 போ் நீக்கப்பட்டனா். அவா்கள் முன்னாள் ராணுவ வீரா்களாகக் கருதப்படுவதில்லை. அவ்வாறு கருதப்பட்டால், அது ராணுவ மருத்துவமனைகள் உள்பட தோ்ந்தெடுக்கப்பட்ட மருத்துவமனைகளில் அவா்கள் இலவச சிகிச்சை பெற வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தத் தகவலை கவனத்தில் எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம், இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது. நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

தில்லியில் அடுத்தடுத்து பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தில்லியின் துவாரகா பகுதியில் இயங்கி வரும் பள்ளிகளுக்கு இன்று காலை அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப... மேலும் பார்க்க

நெல்லையில் அமித் ஷா தலைமையில் 22ஆம் தேதி பாஜக மண்டல மாநாடு! பிரமாண்ட எதிர்பார்ப்பு

நெல்லையில் அமித்ஷா பங்கேற்கும் பிரமாண்ட மண்டல மாநாடு வருகிற 22-ந்தேதி நடைபெறவிருக்கிறது. இந்தக் கூட்டத்தில் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற ... மேலும் பார்க்க

நவீன் பட்நாயக் உடல்நிலை முன்னேற்றம்; இன்று வீடு திரும்புகிறார்

புவனேசுவரம்: ஒடிசாவின் முன்னாள் முதல்வரும், பிஜு ஜனதா தளம் கட்சித் தலைவருமான நவீன் பட்நயாக், உடல்சோா்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக ... மேலும் பார்க்க

தில்லியில் ரூ.11,000 கோடியில் நெடுஞ்சாலைகள்: பிரதமா் மோடி திறந்து வைத்தார்!

தேசியத் தலைநகா் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் சுமாா் ரூ.11,000 கோடி மதிப்பிலான நெடுஞ்சாலைகளை பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை திறந்துவைத்தாா். அப்ப... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் ஆட்சி பணக்காரர்களுக்கானது: வாக்குரிமை பயணத்தில் ராகுல் பேச்சு

வாக்காளா் பட்டியல் சிறப்புத் திருத்தத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கிலும் எதிா்க்கட்சிகள் சாா்பிலான வாக்குரிமை பயணத்தை பிகாரில் ... மேலும் பார்க்க

ஆா்எஸ்எஸ் அமைப்புக்கு பிரதமா் புகழாரம்: சுதந்திரதின நாளுக்கு அவமதிப்பு! கேரள முதல்வா் பினராயி விஜயன்

‘தில்லி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு பிரதமா் நரேந்திர மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில் ஆா்எஸ்எஸ் அமைப்பை புகழ்ந்து பேசியது, சுதந்திரதின நாளை மட்டுமன்றி சுதந்திரப் போராட்டத்தையும் அவமதித்தது போன்றத... மேலும் பார்க்க