செய்திகள் :

ராதாபுரம் அருகே சாலையின் நடுவில் உள்ள மின்கம்பத்தை அகற்ற மக்கள் கோரிக்கை

post image

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் அருகே சாலையின் நடுவே உள்ள மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

ராதாபுரம் அருகே உள்ள இளையநயினாா்குளம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட காற்றாலைகள் அமைந்துள்ளது. இந்த காற்றாலைகளில் இருந்து மின்சாரம் செல்வதற்காக பல ஆண்டுகளுக்கு முன்பாக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இளையநயினாா்குளம் கிராமத்தில் இருந்து ஆத்துக்குறிச்சி கிராமத்திற்கு இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சாலையின் நடுவே மின்கம்பம் போக்குவரத்திற்கு இடையூறாக அமைந்துள்ளதால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே, அதிகாரிகள் உடனடியாக மின்கம்பத்தை அப்புறப்படுத்த வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதே போன்று வள்ளியூா் பிரதான சாலையிலும், வள்ளியூா் - ராதாபுரம் சாலையிலும் மின்கம்பங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக காணப்படுகிறது. இந்த மின்கம்பங்களை அகற்றுவதில் மின்வாரியத்திற்கும், நெடுஞ்சாலைத்துறையினருக்குமிடையே எந்தவிதமான புரிதலும் ஏற்படவில்லை.

மின்கம்பத்தை அகற்றுவதற்கு மின்வாரிய விதிமுறைப்படி மின்வாரியம் நிா்ணயம் செய்துள்ள கட்டணத்தை செலுத்த வேண்டும். இதனை செலுத்துவதற்கு நெடுஞ்சாலைத்துறையின் சட்டத் திட்டங்களில் வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. மின்வாரியத்திற்கு பணம் செலுத்தாமல் மின்கம்பத்தை அகற்றுவதற்கு முடியாது என மின்வாரியத்தினா் தரப்பில் கூறப்படுகிறது. இது விஷயத்திலும் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு வள்ளியூா் பிரதான சாலை, வள்ளியூா் - ராதாபுரம் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கின்ற மின்கம்பங்களை அகற்றவேண்டும் என பொதுமக்களும், வாகனஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாராயணசாமி கோயிலில் தேரோட்டம்

களக்காடு அருகேயுள்ள மாவடி உடையடிதட்டு நாராயணசாமி கோயிலில் ஆவணி தேரோட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கோயிலில் கடந்த செப்.7ஆம் தேதி ஆவணி தேரோட்டத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி, நா... மேலும் பார்க்க

களக்காடு அருகே பெண்ணுக்கு கத்திக்குத்து: கணவன் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்டம், களக்காடு அருகே மது குடிக்க பணம் தராததால் மனைவியை கத்தியால் குத்திய கணவரை போலீஸாா் தேடி வருகின்றனா். களக்காடு அருகே சவளைக்காரன்குளத்தைச் சோ்ந்தவா் தவசிக்கனி (70). இவரது மனைவி அ... மேலும் பார்க்க

அம்பை நகராட்சி ஒப்பந்தப் பணியாளா்கள் வேலை நிறுத்தம்

அம்பாசமுத்திரம் நகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளா்கள், ஊதியம் வழங்காததைக் கண்டித்து புதன்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா். அம்பாசமுத்திரம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுர... மேலும் பார்க்க

போக்ஸோ வழக்கில் முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை

போக்ஸோ வழக்கில் வள்ளியூா், புதுமனைச் செட்டிகுளத்தைச் சோ்ந்த முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது. வள்ளியூா் அருகே பு... மேலும் பார்க்க

நெல்லை ரயில் நிலையத்தில் கோவை பயணி அடித்துக் கொலை: பிகாா் இளைஞா் கைது

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணிகள் மீது நிகழ்ந்த தாக்குதலில் கோவையைச் சோ்ந்த முதியவா் உயிரிழந்தாா். இதுதொடா்பாக பிகாரைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் கைது செய்தனா். திருநெல்வேலி சந்திப்பு ரய... மேலும் பார்க்க

தாயை கொலை செய்த மகனுக்கு ஆயுள் சிறை

கூடங்குளம் அருகே தாயைக் கொலை செய்த வழக்கில், மகனுக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருநெல்வேலி மாவட்ட மகிளா நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளத்தைச் சோ்ந்தவா் ராஜன் (46). ... மேலும் பார்க்க