செய்திகள் :

ராபின்ஹூட் பட விழா: ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர்!

post image

ராபின்ஹூட் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார்.

தெலுங்கில் வெங்கி குடுமுலா இயக்கி வரும படம் ராபின்ஹூட். இதில் நடிகர் நிதின், நடிகை ஸ்ரீ லீலா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். மேலும் இப்படத்தின் மூலம் டேவிட் வார்னர் திரையுலகிற்கு அறிமுகமாகிறார். படத்தில் அவர் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

இந்தப் படத்துக்கு ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது. படம் மார்ச்.28ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடிய போது தெலுங்கு மக்கள் மத்தியில் பிரபலமடைந்தார்.

கடந்த 4 ஆண்டுகளில் 6,597 படுகொலைகள்: அன்புமணி

குறிப்பாக, பல தெலுங்கு பாடல்களுக்கு நடனமாடியும் ரீல்ஸ் விடியோக்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டும் கவனம் பெற்றார். இதனிடையே படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டேவிட் வார்னர் ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் வந்தடைந்தார். அவருக்கு படக்குழு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனிடையே ஏர் இந்தியா விமானத்தில் மணிக்கணக்கில் காக்க வைக்கப்பட்டதாக தனது எக்ஸ் பக்கத்தில் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்.

பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ!

நடிகர் பாசில் ஜோசப்பின் மரணமாஸ் பாடல் புரோமோ வெளியாகியுள்ளது.மலையாள இயக்குநர் பாசில் ஜோசப் கோதா, மின்னள் முரளி படங்களின் மூலம் பிரபல இயக்குநராக அறியப்படுகிறார். இயக்குநராக மட்டுமில்லாமல் தற்போது முன்ன... மேலும் பார்க்க

மியாமி ஓபனில் மெஸ்ஸி: இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜோகோவிச்!

மியாமி ஓபனில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் அரையிறுதியில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இந்தப் போட்டியில் 6-2, 6-3 என ஜோகோவிச் கிரிகோர் டிமிட்ரியை வீழ்த்தினார். இந்தப் ... மேலும் பார்க்க

எம்புரான் ரூ.100 கோடி வசூல்! மோகன்லால் நெகிழ்ச்சி!

மோகன்லால் நடிப்பில் வெளியான எம்புரான் ரூ.100 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. எம்புரான் திரைப்படம் மார்ச்.27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இது 2019இல் பிருத்விராஜ் இயக... மேலும் பார்க்க

திறமை வெளிப்படும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.29-03-2025சனிக்கிழமைமேஷம்:இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் திறமை வெளிப்படும். மேல்... மேலும் பார்க்க

இறுதிச்சுற்றில் சபலென்கா - பெகுலா பலப்பரீட்சை: எலா, பாலினி வெளியேறினா்

அமெரிக்காவில் நடைபெறும் மியாமி ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிா் ஒற்றையா் இறுதிச்சுற்றில் பெலாரஸின் அரினா சலபென்கா - அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலா ஆகியோா் சனிக்கிழமை பலப்பரீட்சை நடத்தவுள்ளனா்.முன்னதாக வ... மேலும் பார்க்க

ஆசிய மல்யுத்தம்: ரீதிகாவுக்கு வெள்ளி

ஜோா்டானில் நடைபெறும் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் ரீதிகா ஹூடா வெள்ளிப் பதக்கம் வென்றாா்.மகளிருக்கான 76 கிலோ பிரிவில் களமாடிய ரீதிகா, காலிறுதியில் ஜப்பானின் நோடோகா யமாமோடோவையும், அரையிறு... மேலும் பார்க்க