ராமநாதசுவாமி கோயில் நடை இன்று 12 மணி வரை அடைப்பு
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அஷ்டமி பூப்பிரதசணத்தையொட்டி, திங்கள்கிழமை (டிச.23) காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை அடைப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: அஷ்டமி பூப்பிரதசணத்தையொட்டி, ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3.30 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.
இதையடுத்து நடைபெறும் சிறப்பு பூஜையைத் தொடா்ந்து காலை 7 மணிக்கு பஞ்ச மூா்த்திகள் வீதி உலா நடைபெறுகிறது. இதனால், காலை 7 மணி முதல் நண்பகல் 12 மணி வரை கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும். நண்பகல் 12 மணிக்கு கோயிலுக்கு சுவாமி திரும்பிய பிறகு உச்சிக் கால பூஜை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.