செய்திகள் :

ராமநாதபுரம்: குடி போதையால் நேர்ந்த விபரீதம்... நண்பனைக் கொன்ற வாலிபர் கைது; என்ன நடந்தது?

post image

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்டது தில்லைநாச்சியம்மன் கோயில் குடியிருப்புப் பகுதி. இப்பகுதியைச் சேர்ந்த நாகரத்தினம் என்பவரின் மகன் குழந்தை வேலு. இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு மாத கைக்குழந்தையும் உள்ளனர். இவரது வீட்டின் அருகே வசித்து வருபவர் சேகர் மகன் சரவணன். குழந்தைவேலுவும், சரவணனும் நண்பர்கள்.

இந்நிலையில் நேற்று (ஜனவரி 21) பகலில் குழந்தைவேலுவும், சரவணனும் ஒன்றாகச் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். பகல் பொழுது மறைந்து இரவு ஆன நிலையில் மதுபோதை தலைக்கு ஏற நண்பர்கள் இருவருக்கும் இடையே மோதல் எழுந்துள்ளது. இதில் சரவணன், குழந்தைவேலுவைக் கோழி வெட்டும் கத்தியால் குத்தியதில் குழந்தைவேலு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கொலை செய்த சரவணனும் போதை மயக்கத்தில் அங்கேயே இருந்துள்ளார்.

கொலை செய்யப்பட்ட் குழந்தைவேலு
கொலை செய்யப்பட்ட் குழந்தைவேலு

இரவு நெடுநேரம் ஆகியும் குழந்தைவேலு வீடு திரும்பாததால் அவரது உறவினர்கள் அவரைத் தேடிய போது குழந்தைவேலு உயிரிழந்த நிலையில் கிடந்ததைக் கண்டனர். இதையடுத்து அவர்கள் இது குறித்து உச்சிப்புளி காவல்நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.

உச்சிப்புளி காவல் நிலையம்
உச்சிப்புளி காவல் நிலையம்

சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார், குடிபோதையில் கிடந்த சரவணனைக் கைது செய்ததுடன், கொலையாகிக் கிடந்த குழந்தைவேலுவின் உடலைக் கைபற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த உச்சிப்புளி போலீஸார், குழந்தைவேலு கொலை செய்யப்பட்டதற்கு வேறு ஏதும் காரணங்கள் உள்ளதா என விசாரணை நடத்தி வருகின்றனர்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

புதுக்கோட்டை: சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலை; குவாரிகளில் கனிமவளத்துறையினர் ட்ரோன் மூலம் ஆய்வு!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜகபர் அலி (வயது: 58). இவர், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக திருமயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கல்குவாரிகளில் ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி தொல்லை; பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியால் சிக்கிய பள்ளி அலுவலர்

விருதுநகர் அருகே பள்ளி மாணவிகளுக்கு செல்போனில் ஆபாசப் படம் காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்த நபரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.இந்த சம்பவம் குறித்து போலீசிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்க... மேலும் பார்க்க

``கல்வித்துறையில் அரசு வேலை..'' 34 பேரிடம் ரூ 1.11 கோடி வசூல் -2 பெண்கள் கைது!

தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் பொறியாளர் சுந்தரவிக்னேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவர் கல்வித்துறையில் அரசு வேலை வாங்கித் தருவதாக தான் உள்பட 33 பேரிடம் 1.11 கோடி ரூ... மேலும் பார்க்க

Saif Ali Khan: திருடனுடன் போராடிய சைஃப் அலிகான்; தப்பிக்கவிட்ட பணியாளர்கள்... விசாரணையில் பகீர்!

ஒளிந்து கொண்ட ஆண் பணியாளர்கள்...மும்பை பாந்த்ராவில் வசிக்கும் நடிகர் சைஃப் அலிகான் கடந்த வாரம் மர்ம நபரால் தாக்கப்பட்டார். நள்ளிரவில் வீட்டிற்குள் வந்த மர்ம நபர் சைஃப் அலிகானை பிளேடால் தாக்கிவிட்டு தப... மேலும் பார்க்க

Baba Ramdev: மீண்டும் சிக்கலில் பாபா ராம்தேவ்; கைது வாரண்ட் பிறப்பித்த கேரள நீதிமன்றம்!

பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனர் பாபா ராம்தேவின் மருந்துப் பொருள்களின் விளம்பரங்களில் தவறான தகவல்கள் இடம்பெறுவதாகவும், அதைத் தடை செய்யக் கோரியும் வழக்கு தொடரப்பட்டது. உச்ச நீதிமன்றத்தில் கூட இந்த நிறுவனத... மேலும் பார்க்க

சேலத்தில் மீண்டும் தலைதூக்கும் போதை ஊசி கலாச்சாரம்... கண்டுக்கொள்ளுமா காவல்துறை!

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டமான சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகியவற்றில் தான் போதை வஸ்துக்களை உட்கொண்டதால் ஏற்பட்ட குற்றச் சம்பவங்கள் அதிகமாகியுள்ளது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்!சேலம் மாநகரத்தி... மேலும் பார்க்க