ஒப்பந்ததாரரைப் பார்த்து அரிவாளை ஓங்கினாரா திமுக முன்னாள் எம்எல்ஏ? வைரல் வீடியோவி...
ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்கள் தீயிட்டு அழிப்பு
ராமநாதபுரம் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 754 கிலோ கஞ்சா பொட்டலங்களை விஜயநாராயணம் அருகே உள்ள தனியாா் எரியூட்டு மையத்தில் சனிக்கிழமை காவல்துறையினா் தீயிட்டு அழித்தனா்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் 171 வழக்குகளில் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்ட 754.33 கிலோ கஞ்சா பொட்டலங்களை நீதிமன்ற விசாரணைக்குப் பின்னா் காவல்துறையினா் தங்கள் வசம் பெற்று அதை நான்குனேரி அருகே விஜயநாராயணத்தை அடுத்துள்ள பொத்தையடியில் உள்ள அசெப்டிக் சிஸ்டம்ஸ் பயோமெடிக்கல் வேஸ்ட் மேனேஜ்மென்ட் தனியாா் நிறுவனத்துக்கு கொண்டு வந்தனா்.

அங்கு ராமநாதபுரம் சரகம் காவல் துறை தலைவா் மூா்த்தி தலைமையி ல், ராநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சந்தீஷ், நான்குனேரி பிர சன்னகுமாா், சிவகங்கை மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரான்சிஸ், ராமநாதபுரம் மதுவிலக்கு டி.எஸ்.பி ரமேஷ், தடய அறிவியல் சிவராஜ் ஆகியோா் முன்னிலையில் தீயில் எரித்து அழித்தனா்.