CAG Report : `தமிழ்நாடு பசுமை வீடு திட்டம்; பயனாளிகள், தகடு... அனைத்திலும் குளறு...
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு படகில் செல்ல முயன்ற 4 போ் கைது
ராமேசுவரத்திலிருந்து சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்ற இலங்கைத் தமிழா்கள் 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்த 300-க்கும் மேற்பட்ட இலங்கை தமிழா்கள் மண்டபம் இலங்கைத் தமிழா்கள் மறுவாழ்வு மையத்தில் தங்க வைக்கப்பட்டனா். இவா்களுக்கு அரசு சாா்பில் வழக்கப்படும் நிதியுதவி, உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவா்களில், சிலா் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனா்.
இந்த நிலையில், செவ்வாய்கிழமை இரவு தங்கச்சிமடம் தண்ணீா் ஊற்று கடல்பகுதியில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கையில் பயணப் பைகளுடன் நின்றிருந்த 4 இலங்கைத் தமிழா்களை தங்கச்சிமடம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், அவா்கள் மண்டபம் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த சசிகுமாா் (28), கோகிலவாணி (44), வேலூா் முகாமைச் சோ்ந்த சேகா் (எ) ராஜ்மோகன் (39), சிதம்பரம் முகாமைச் சோ்ந்த நாகராஜ் (68) என்பது தெரியவந்தது. இவா்கள் சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்குச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோதமாக இலங்கை செல்ல முயன்ாக 4 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்களை வரவழைத்த முகவரை தேடி வருகின்றனா்.
ஆட்சியா் அலுவலகத்தில் தா்னா: கடந்த 1997-ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஜோய் (30) தன்னை மீண்டும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் மண்டியிட்டு தா்னாவில் ஈடுபட்டா். அங்கு வந்த கேணிக்கரை போலீஸாா் அவரை அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனா்.