செய்திகள் :

`ரூ.1 கோடி கொடுக்காவிட்டால் சாகும் வரை சிறை'- காதலனை மிரட்டிய மும்பை வங்கி பெண் அதிகாரி கைது!

post image

மும்பையில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தவர் டோல்லி கோடக். இவர் தனது சகோதரன் மற்றும் தன்னுடன் பணியாற்றிய வங்கி ஊழியர்களின் துணையோடு தனது காதலனை மிரட்டி ஒரு கோடி பணம் கேட்டுள்ளார். டோல்லி கோடக்கின் முன்னாள் காதலன் தகவல் தொழில் நுட்ப கம்பெனியில் பணியாற்றி வருகிறார். அவருடன் டோல்லிக்கு இருந்த உறவு துண்டிக்கப்பட்டதால் போலியான காரணம் சொல்லி தனது காதலனை சிறைக்கு அனுப்பினார். சிறையில் இருந்து காதலன் ஜாமீனில் வந்த அன்று டோல்லி தனது காதலனின் சகோதரியை கோர்ட்டில் சந்தித்து பேசினார்.

அப்போது ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் இவ்வழக்கில் இருந்து விடுபட தடையில்லா சான்று கொடுக்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். அப்படி பணம் கொடுக்கவில்லையெனில் மீடியா மூலம் பெயரை களங்கபடுத்துவேன் என்று மிரட்டினார். அப்படி இருந்தும் டோல்லியின் காதலன் குடும்பம் பணம் கொடுக்க மறுத்து வந்தது. இதனால் டோல்லி தொடர்ந்து மெசேஜ் மற்றும் போன் மூலம் பணம் கேட்டுக்கொண்டே இருந்தார். அதோடு டோல்லி தனது காதலனின் வழக்கறிஞரிடமும் சென்று பணம் கேட்டார். ஆனாலும் காதலன் பணம் கொடுக்கவில்லை.

இதையடுத்து டோல்லி தன்னுடன் பணியாற்றிய ஹரிஷ், ஆனந்த் ரூயா, ஜெயேஷ் கெய்க்வாட் ஆகியோர் துணையுடன் தனது காதலனுக்கு தெரியாமல் அவரது டிஜிட்டல் டேட்டாவை திருடினார். அதோடு தனது மொபைல் நம்பரை காதலனின் இமெயிலோடு இணைத்தார். இது தவிர காதலனின் அந்தரங்க புகைப்படம், ஆன்லைன் வங்கிக் கணக்கு ஆகியவற்றையும் டோல்லி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். திடீரென டோல்லி தனது போன் நம்பரில் இருந்து காதலனுக்கு ஒரு மிரட்டல் மெசேஜ் அனுப்பினார். அதில் 'நீ வெற்றி பெற முடியாது. வேதனையில் சாவு. பணம் கொடு. இல்லாவிட்டால் சிறையில் சாவு' என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அதோடு காதலன் பணியாற்றிய கம்பெனி அதிகாரிக்கு காதலனைப் பற்றி தவறான தகவல்களை இமெயில் மூலம் அனுப்பி வைத்தார். இதனால் அவரை கம்பெனி நிர்வாகம் பணியில் இருந்து நீக்கியது. இதையடுத்து இது குறித்து பாதிக்கப்பட்ட காதலன் போலீஸில் புகார் செய்தார். ஆனால் போலீஸார் நடவடிக்கை எடுக்க மறுத்தனர். இதையடுத்து மும்பை போரிவலி கோர்ட்டில் இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர் மனுத்தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம் இப்புகார் குறித்து விசாரித்து வழக்கு பதிவு செய்ய போலீஸாருக்கு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் போலீஸார் டோல்லி, அவரது சகோதரன் சாகர் கோடக், அவரது தோழி பிரமிளா மற்றும் வங்கி ஊழியர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. டோல்லி கைது செய்யப்பட்டுள்ளார்.

புதுச்சேரி: விடிய விடிய போதை நடனம்… அத்துமீறும் `ரெஸ்டோ’ பார்கள்… அமைதி காக்கும் காவல், கலால் துறை

கரன்சிகளால் காற்றில் பறக்கவிடப்படும் விதிகள்சுற்றுலா மாநிலமான புதுச்சேரி, தன்னுடைய வருவாய்க்காக பெரிதும் நம்பியிருப்பது கலால் வரியைத்தான். அதனால்தான் மது மீதான மாநில அரசின் வரியைக் குறைத்து அண்டை மாநி... மேலும் பார்க்க

`பிரிந்த காதலை சேர்க்க' - பிளாக் மேஜிக் இன்ஸ்டா விளம்பரத்தை நம்பி ரூ.16 லட்சத்தை இழந்த மும்பை பெண்

இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரம்மக்களின் அன்றாட வாழ்க்கையில் சமூக ஊடகங்கள், முகநூல் பக்கங்கள் மிகவும் முக்கிய பங்கு வகிக்கின்றன. வீட்டில் இப்போது உறவுகள் பேசிக்கொள்வதை விட போனில் தான் அதிகமான நேரம் மூழ்... மேலும் பார்க்க

புதுச்சேரி: பிறந்த நாள் மது விருந்தில் தகராறு - மாணவரை `ரெஸ்டோ' பார் ஊழியர் கொலை செய்த பின்னணி

சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் முதுநிலை மூன்றாம் ஆண்டு படிக்கும் மதுரை மேலூரைச் சேர்ந்த ஷாஜன் என்பவர், தன்னுடைய பிறந்த நாளை புதுச்சேரியில் மது விருந்துடன் கொண்டாட முடிவெடுத்திருக்கிறார். அதற்கான தன்னு... மேலும் பார்க்க

சென்னையில் நடந்த கொலை.. கோவை கிணற்றில் வீசப்பட்ட உடல்.. 50 நாள்களுக்கு பிறகு வெளிவந்த உண்மை

கோவை செட்டிப்பாளையம் காவல் நிலையத்தில் நேற்று இரண்டு பேர் கொலை வழக்கு ஒன்றில் சரணடைந்தனர். விசாரணையில் அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்த பாலமுருகன் (45) மற்றும் பாளையங்கோட்டை பகுதிய... மேலும் பார்க்க

கோவை தனியார் நிறுவனம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் கிடந்த கை - காவல்துறை விசாரணையில் அதிர்ச்சி

கோவை மாவட்டம், சூலூர் அருகே கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வளாகம் அருகே துண்டிக்கப்பட்ட நிலையில் மனித கை ஒன்று கண்டறியப்பட்டது. அதன் அருகிலேயே ரயில் தண்டவாளம் இருக்கிறது.கோவை ஏதாவது... மேலும் பார்க்க

தேனி: பராமரிப்பு பணிக்காக சென்ற ரயில் இன்ஜின் மோதி 14 வயது சிறுவன் உயிரிழந்த சோகம்

தேனி பங்களாமேடு பகுதியை சேர்ந்தவர்கள் வடிவேல் - அருள் ஆனந்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள். அருள் ஆனந்தி ஆண்டிப்பட்டியில் உள்ள நிறுவனத்தில் கூலி வேலைக்கு சென்று வருகிறார். ஆனந்தி வேலைக்கு செ... மேலும் பார்க்க